மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறைச்சாலைகளில் உள்ள தாய்மார்கள் தொடர்பில் பிரதமர் விசேட அறிவிப்பு!

- Advertisement -

உள்நாட்டு சிறைகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு பிள்ளைகளுடன் சிறைவாசம் அனுபவிக்கும்  தாய்மார் குறித்த விபரங்கள் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம்  கையளிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளேயினால் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதில் பிள்ளைகளுடன் சிறைவாசம் அனுபவிக்கும் 46 தாய்மாருடைய விபரங்கள் அடங்கியுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

அத்துடன் சிறைச்சாலைக்குள் கைதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவிப்போரை பணிகளுக்கு ஈடுபடுத்துகையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் கூறியுள்ளார்.

போதைப்பொருள் பாவனையாளர்களை பண்ணைகள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியில் ஈடுபடுத்தி சமூகத்துக்கு ஏற்ற பிரஜைகளாக மாற்ற வேண்டும் எனவும் பிரதமர் கோரியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஹேமசிறி பெர்ணான்டோவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது : முன்னாள் ஜனாதிபதி மறுப்பு!

உயிர்த்த  ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னேடுத்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்த கருத்தினை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி...

ஹரீன் பெர்ணான்டோவினது கருத்து உண்மைக்குப் புறம்பானது : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மறுப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ முன்வைத்த கருத்தினை  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மறுத்துள்ளார். அத்துடன், இந்த கருத்திற்கு...

மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு விசேட சலுகைகள்!

நாட்டில் புதிதாக முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் போது மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு  விசேட சலுகை வழங்குவதற்கு...

பொதுஜன பெரமுனவில் இருந்து முக்கிய நபர் நீக்கம்!

பதுளை மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து ஆதர் சில்வா நீக்கப்பட்டுள்ளார். ஒழுக்காற்று நடவடிக்கையின் அடிப்படையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பதுளை மாநகர சபையின் தலைவர் பிரியந்த...

மேலும் அதிகரித்த கொரோனா தொற்று!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும்  மூவர்  இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியுள்ள மூவருக்கு இவ்வாறு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  3 ஆயிரத்து 287...

Developed by: SEOGlitz