மெய்ப்பொருள் காண்பது அறிவு

விவசாயத்துறை அமைச்சர் இன்று யாழிற்கு விஜயம்!

- Advertisement -

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட குழுவினர், இன்றையதினம் வடக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகவே அமைச்சர் இவ்வாறு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

- Advertisement -

இதற்கமைய, யாழ்ப்பாணம், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அச்செழு பகுதியில் இன்று காலை திராட்சை அறுவடை நிகழ்வில் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விஜயத்தில், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும்,  யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன்,  கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான சஷிந்திர ராஜபக்‌ஷ, டி.பி. ஹேரத் மற்றும் மொஹான் டி சில்வா,  நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை, கால்நடை வளர்ப்பு, வாழை மற்றும் கிழங்கு பயிர்ச்செய்கை தொடர்பில் ஆராய்வதற்காக நீர்வெலி மற்றும் அச்சுவேலி ஆகிய பிரதேசங்களுக்கு நாளை மறுதினம்  விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஹேமசிறி பெர்ணான்டோவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது : முன்னாள் ஜனாதிபதி மறுப்பு!

உயிர்த்த  ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னேடுத்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்த கருத்தினை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி...

ஹரீன் பெர்ணான்டோவினது கருத்து உண்மைக்குப் புறம்பானது : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மறுப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ முன்வைத்த கருத்தினை  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மறுத்துள்ளார். அத்துடன், இந்த கருத்திற்கு...

மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு விசேட சலுகைகள்!

நாட்டில் புதிதாக முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் போது மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு  விசேட சலுகை வழங்குவதற்கு...

பொதுஜன பெரமுனவில் இருந்து முக்கிய நபர் நீக்கம்!

பதுளை மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து ஆதர் சில்வா நீக்கப்பட்டுள்ளார். ஒழுக்காற்று நடவடிக்கையின் அடிப்படையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பதுளை மாநகர சபையின் தலைவர் பிரியந்த...

மேலும் அதிகரித்த கொரோனா தொற்று!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும்  மூவர்  இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியுள்ள மூவருக்கு இவ்வாறு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  3 ஆயிரத்து 287...

Developed by: SEOGlitz