மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாட் – லக்‌ஷ்மன் கிரியெல்ல ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை!

- Advertisement -

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் லக்‌ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.

இன்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரமே, அவர்கள் முன்னிலையாகியுள்ளனர்.

- Advertisement -

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே, அவர்கள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நேற்றையதினமும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

இதேவேளை, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர்  நிலந்த ஜயவர்தன பயன்படுத்திய தொலைபேசி மற்றும் அவரது மடிக்கணணியை ஆணைக்குழுவில் ஒப்படைக்குமாறு,  உத்தரவிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின், பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிகந்த நேற்றைய தினம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம் – ஒருவர் உயிரிழப்பு

கண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி – பூவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று இன்று காலை இடிந்து வீழ்ந்துள்ளது. இந்தக் கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சுமார் ஒன்றரை...

புத்தளத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கண்காணிப்பு விஜம்

புத்தளம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்றைய தினம் கண்காணிப்பு விஜமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்படி, மதுரங்குளி மற்றும் வாழைச்சேனை தோட்டங்களின் செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்து...

கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தை மீட்பு

கண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து சுமார் ஒன்றரை மாதக் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம்

கண்டி - பூவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்துள்ளது. குறித்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மூவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

“தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் கைது

ஆவா குழுவில் இருந்து வெளியேறிய “தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் யாழ்ப்பாணம் மாணிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்  மேற்கொள்ளப்பட்ட  திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்  போதே...

Developed by: SEOGlitz