மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனநாயகத்தின் விழுமியங்களைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் : பிரதமர் மஹிந்த!

- Advertisement -

ஜனநாயகத்தின் விழுமியங்களைப் பாதுகாப்பதற்கு தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு பிரதமரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், சர்வதேச ஜனநாயக தினம் உலக ஜனநாயகத்தின் நிலையை மதிப்பாய்வு செய்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஜனநாயகத்தை பாதுகாத்த ஒரு நாட்டின் பிரதமர் என்ற வகையில் சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிடுவதற்கு கிடைத்தமை தொடர்பில் நான் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய மக்கள் சமூகத்தினுள் அனைவரும் தங்களது ஜனநாயக உரிமை உறுதிபடுத்தப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும், அவர்களது வாழ்க்கையில் சுதந்திரம் மற்றும் சந்தோஷத்தை அனுபவிக்கும் உரிமையை பாதுகாத்தல் ஜனநாயகத்தின் குறிக்கோளாக காணப்பட வேண்டும் என தாம் நம்புவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தாம் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்காக முன்னின்று செயற்பட்டதுடன், தேர்தல்களை நடத்தாத அரசாங்கங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து நாட்டு மக்களுடன் ஜனநாயகத்தின் வெற்றிக்காக  செயற்பட்டதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் எதிர்காலத்திலும் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தி மக்கள் தம் மீது கொண்ட ஜனநாயகத்தின் உன்னத விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கு ஒரு அரசாங்கமாக அர்ப்பணிப்புடன் செயற்பட உள்ளதாகவும் பிரதமர் குறித்த அறிக்கையில் உறுதி அளித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பரந்தன் – பூநகரி பிரதான வீதி பூட்டப்பட்டது!

கிளிநொச்சி, பரந்தன் - பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர்  சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார். இதன்படி பரந்தன் பூநகரி வீதியூடாக எதிர்வரும் மூன்றாம்...

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் ஒழுங்காகச் செயற்படவில்லை : அரவிந்தகுமார்!

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் முறையற்ற போக்கை கடைப்பிடித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார். பதுளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.   CAPITAL...

வீதியை புனரமைத்து தருமாறு கோரி மடுல்சீமை மக்கள் ஆர்ப்பாட்டம்!

மடுல்சீம - மாதோவ பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். மடுல்சீம - பசறை பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மருத்துவ தேவைகளுக்காக பயணிப்போர், பாடசாலை மாணவர்கள் என...

கொக்குப்படையான் கிராம மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளது எனவும், விரைந்து நடவடிக்கை...

கொரோன தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்!

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓமான் நாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

Developed by: SEOGlitz