மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையை பௌத்த நாடு என அடையாளப்படுத்த முடியாது : மங்கள தெரிவிப்பு!

- Advertisement -

இலங்கையின் பெரும்பாலான விடயங்களை சிங்கள பௌத்த பெயரில் அடையாளப்படுத்திக் கொள்வது தவறான விடயமாகும் என மாத்தறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை பௌத்த நாடு கிடையாது என மங்கள சமரவீர கடந்த அரசாங்க காலப்பகுதியில் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

- Advertisement -

இதனையடுத்து, அவரின் குறித்த கருத்துக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த கருத்துத் தொடர்பில் மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நேற்றையதினம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையின் பெரும்பாலான விடயங்களை சிங்கள பௌத்த பெயரில் அடையாளப்படுத்துவது முழுமையாக தவறான விடயமாகும்.

இந்தியாவை எடுத்துக் கொண்டால் அங்கு ஹிந்து மொழியே பெரும்பான்மை மொழியாகும்.அதனால் அது ஹிந்தி நாடு என்று யாரும் கூறுவதில்லை.

இந்தியாவுக்கு இந்தியா என்றே கூறுகின்றார்கள். அந்த யதார்த்தத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால்  காவி உடைகளை வியாபாரமாக செய்கின்ற தேரர்களும், பௌத்த மதம் குறித்து தெளிவில்லாத நபர்களுமே இதனை   இன்று துரதிஷ்டவசமாக புரிந்து கொள்ளாது இருக்கின்றார்கள்.

இந்த சில தேரர்களினாலேயே பெளத்த மதத்தின் தோற்றப்பாடு நாளாந்தம் அழிவடைகின்றது.அந்தத் தேரர்கள்தான் இன்று நாடாளுமன்றத்துக்கு செல்ல ஒவ்வொருத்தரை அடித்துக் கொண்டு தடுமாறுகின்றார்கள்.

தேரர்கள் தான் நாட்டில் இன மதங்களுக்கு எதிராக பாகுபாட்டையும் வைராக்கியத்தையும் உண்டுபண்ணுகின்றார்கள்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் அதிகரிக்கும் அச்சநிலை – 873 பேருக்கு கொரோனா – உயிரிழப்பும் அதிகரிப்பு…!

நாட்டில் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றையதினம் 873 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்ட நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது, பேலிய கொடை கொரோனா கொத்தணியுடன தொடர்புடைய 866 பேரும்,...

நுவரெலியா மாவட்டத்தில் 16 பாடசாலைகளுக்கு தேசிய பாடசாலை அந்தஸ்து!

நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள 16 தமிழ்ப் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விடயத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர்...

இந்தியாவிலிருந்து தடுப்பூசி கொள்வனவு செய்வதற்கான ஆவணங்கள் சட்டமா அதிபரிடம்!

இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசியைக் கொள்வனவு செய்வதற்கு தேவையான ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். குறித்த கொள்வனவு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான சட்ட ரீதியான அனுமதியைப்...

தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா – அதிகரிக்கும் தொற்றாளர்கள்..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 337 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது. பேலியக்கொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 330 பேரும், கைதிகள் 7 பேரும் இவ்வாறு தொற்றுடன்...

மலேசியாவில் நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு எதிர்க்கட்சியினால் கோரிக்கை

மலேசியாவில் நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு அந்தநாட்டு எதிர்க்கட்சித் தலைவர் தத்துக் அன்வர் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார். நம்பிக்கை கூட்டணி மற்றும் ஆளும் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு கடிதம்...

Developed by: SEOGlitz