மெய்ப்பொருள் காண்பது அறிவு

தீவிரவாதிகளுடன் எந்தவொரு தொடர்பும் இல்லை : ரிஷாட் தெரிவிப்பு!

- Advertisement -

தீவிரவாதிகளுக்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று முன்னிலையானதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

“ஸஹ்ரானை நான் என் வாழ்நாளில் கண்டதும் இல்லை தொலைபேசியில் கதைத்ததும் இல்லை. அன்றும் இதனையே கூறினேம் இன்றும் இதனையே கூறுகின்றேன்.

எந்தவொரு அடிப்படை குழுக்களுக்கும் நாம் உதவவில்லை. உதவி செய்யப் போவதும் இல்லை. 1990 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளினால் விரப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

நான் உள்ளிட்ட எனது சமூகத்தைச் சேர்ந்த சுமார் 1 இலட்சம் பேர் வரையில் விரப்பட்டனர். தீவிரவாதிகளால் விரட்டப்பட்ட ஒருவன் நான். 20 வருடங்கள் சுமார் ஒரு லட்சம் எமது மக்கள் புத்தளம் முகாம்களில் தங்கியிருந்தார்கள்.

2009 ஆம் ஆண்டு அமைதியின் பின்னரே நாம் எமது பிரதேசங்களுக்கு சென்றோம். நாம் ஒருபோதும் ஆயுதங்கள் பக்கம் செல்லவில்லை. அதற்கு உதவி செய்யவும் இல்லை” என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பிக் பொஸ் சீசன் 4 ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!

மக்களிடையே வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியான பிக் பொஸ் சீசன் 4 ஆரம்பிக்கும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமடைந்திருந்த குறித்த நிகழ்ச்சி  தொடர்பாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த மாதம் பிக் பொஸ்...

கரையோர இரயில் சேவைகள் பாதிப்பு!

கரையோர இரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வெலிகம இரயில் நிலையத்திற்கு அண்மையில் இரயில் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் குறித்த மார்க்கத்தின் ஊடான புகையிரத சேவைகளில் தாமதநிலை ஏற்பட்டுள்ளதாகத்...

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரின் சொத்துக்கள் முடக்கம்!

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் (Alexei Navalny) இன் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். அலெக்ஸி நவால்னியின் வங்கிக் கணக்குகள் மற்றும் மொஸ்கோவில் அமைந்துள்ள அவருக்குச் சொந்தமான குடியிருப்புத் தொகுதி என்பன...

எஸ்.பி.பியின் உடல்நலம் குறித்து கமல் வெளியிட்டுள்ள தகவல்!

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தினது உடல்நிலையில் சற்றுப்பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியத்தினது உடல்நிலை குறித்து அறிந்து கொள்வதற்கு வைத்தியசாலைக்கு  நடிகர் கமல்ஹாசன் சென்றிருந்தார். இந்நிலையிலேயே எஸ்.பி.பி...

Developed by: SEOGlitz