மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனநாயகத்தின் விழுமியங்களைப் பாதுகாப்பதற்கு தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதமர் தெரிவிப்பு

- Advertisement -

ஜனநாயகத்தின் விழுமியங்களைப் பாதுகாப்பதற்கு தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதமர்  மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு பிரதமரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், சர்வதேச ஜனநாயக தினம் உலக ஜனநாயகத்தின் நிலையை மதிப்பாய்வு செய்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்குவதாக பிரதமர்  தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஜனநாயகத்தை பாதுகாத்த ஒரு நாட்டின் பிரதமர் என்ற வகையில் சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிடுவதற்கு கிடைத்தமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது அனைவரும் தங்களது ஜனநாயக உரிமை உறுதிபடுத்தப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும், அவர்களது வாழ்க்கையில் சுதந்திரம் மற்றும் சந்தோஷத்தை அனுபவிக்கும் உரிமையை பாதுகாத்தல் ஜனநாயகத்தின் குறிக்கோளாக காணப்பட வேண்டும் என தாம் நம்புவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தாம் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்காக  முன்னின்று செயற்பட்டதுடன், தேர்தல்களை நடத்தாத அரசாங்கங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து நாட்டு மக்களுடன் ஜனநாயகத்தின் வெற்றிக்காக  செயற்பட்டதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் எதிர்காலத்திலும் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தி மக்கள் தம் மீது கொண்டுள்ள ஜனநாயகத்தின் உன்னத விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கு ஒரு அரசாங்கமாக அர்ப்பணிப்புடன் செயற்பட உள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பாடும் நிலாவின் மறைவிற்காக கடற்கரையில் வடிவமைத்த ஓவியம்!

புகழ்பெற்ற பிண்ணனி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்தியாவின் ஓடிசா மாநிலத்தில் புரி கடற்கரையில் எஸ்.பி.பி யின் படத்தை வடிவமைத்துள்ளார். இச் சிற்பத்தை சர்வதேச மணற்சிலை வடிவமைப்பாளர் ஒருவர் வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Tribute to legendary...

எஸ்.பி.பி யின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்…..

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல்  அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டம்  தாமரைப்பாக்கத்தில் உள்ள  அவரது பண்ணை இல்லம் பகுதியில்   ராணுவ  மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெற்றதுடன்  72  குண்டுகள்...

எஸ்.பி.பி யின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்!

இளையத் தளபதி நடிகர் விஜய் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.  

கொழும்பு நகரில் போக்குவரத்து சட்டவிதிமுறைகளை மீறுவோருக்கு எச்சரிக்கை!

கொழும்பு நகரில் போக்குவரத்து சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட ஆயிரத்து 200 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சாரதிகள் பொலிஸ் தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பஸ் முன்னுரிமை...

எஸ்.பி.பி யின் இறுதிக்கிரியைகள் ஆரம்பம்!

மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இறுதிக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சமய விதிமுறைகளுக்கமைய இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுவருகின்றன. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் புதல்வர் எஸ்.பி.சரண் தனது தந்தையாருக்கு இறுதிக்கிரியைகள் சம்பிரதாயங்களை முன்னெடுத்துள்ளார்.

Developed by: SEOGlitz