மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜப்பானிய பிரதமர் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்ட புதிய நபர்!

- Advertisement -

ஜப்பானின் கன்சர்வேட்டிவ் லிபரல் ஜனநாயக கட்சியின் புதிய தலைவராக,  யொஷிஹிடே சுகா (Yoshihide Suga) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய பிரதமர் பதவி மற்றும் கட்சியின் தலைவர் பதவி ஆகியவற்றில் இருந்து  ஷின்ஸோ அபே அவரது உடல்நிலையில்  ஏற்பட்டுள்ள பாதிப்பினை அடுத்து அண்மையில் விலகியிருந்தார்.

- Advertisement -

இதனையடுத்து புதிய கட்சித்தலைவரை தெரிவு செய்வதற்காக, ஆளும் கட்சியான  கன்சர்வேட்டிவ் லிபரல் ஜனநாயக கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் யொஷிஹிடே சுகா வெற்றிபெற்றுள்ளார்.

இந்நிலையில்,நாளை மறுதினம் ஜப்பானிய நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில் ஜப்பானின் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்படுவார் என கன்சர்வேட்டிவ் லிபரல் ஜனநாயக கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் லிபரல் ஜனநாயக கட்சிக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் காணப்படுகின்றது.

இந்நிலையில், ஜப்பானில் அடுத்த வருடம் செப்டெம்பர் மாதம் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தற்போது புதிய பிரதமாராகத் தெரிவுசெய்யப்படும் யொஷிஹிடே சுகா தேர்தல் வரை பிரதமராக நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை மேம்படுத்த துமிந்த திஸாநாயக்க நடவடிக்கை!

நிலையானதும் புதுப்பிக்கத்தக்கதுமான எரிசக்தி உற்பத்திக்கான இலக்குகளை அடைய தேவையான கொள்கைகளை வகுப்பதே தமது முதன்மை இலக்காகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த...

20 ஆவது திருத்தம் குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு தாம் தலைவணங்குவதாக அமைச்சர் கருத்து!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு தாம் தலைவணங்குவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். CAPITAL NEWS · 704577 20 ஆவது...

எழுத்து – வாய்மொழிப் பரீட்சைகளுக்கு பதிலாக மாற்று முறையை பின்பற்ற உள்ளூராட்சி அமைச்சு தீர்மானம்!

அரச கரும மொழிகளில் தேர்ச்சி பெறுவதற்காக எழுத்து மற்றும் வாய்மொழிப் பரீட்சைகளுக்கு பதிலாக மாற்று முறையை பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக குறிப்பிட்ட மணித்தியால அளவிலான பாடத்திட்டத்தை பூர்த்தி செய்யும் வாய்ப்பை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரச சேவைகள்,...

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 339 பேர் இன்று நாட்டுக்கு வருகை!

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 339 பேர் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 3 விசேட விமானங்களின் ஊடாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக, எமது விமான நிலைய...

தபால் சேவையை பொருளாதாரத்தின் பிரதான பங்காக மாற்றலாம்: ஜனாதிபதி வலியுறுத்தல்!

இலங்கை தபால் சேவையை தேசிய பொருளாதாரத்தின் பிரதான பங்காக மாற்ற முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதன்படி, சர்வதேச தபால் சேவை தொடர்பில் கவனஞ் செலுத்தி, பரந்த அளவிலான சேவை வாய்ப்புகளை...

Developed by: SEOGlitz