மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆயுர்வேத வைத்தியருக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய விசேட தீர்ப்பு!

- Advertisement -

பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், ஆயுர்வேத வைத்தியர் ஒருவருக்கு 15 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர், திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

கந்தளாய் – பேராறு பகுதியைச் சேர்ந்த 53 வயதையுடைய ஆயுர்வேத வைத்தியர் ஒருவருக்கே இவ்வாறு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டிருந்த குறித்த நபரை கைது செய்யுமாறு கடந்த பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார்.

இதனையடுத்து, சந்தேகநபரை உடனடியாக கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, சந்தேகநபர் கொகரல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிஹினிவெஹர பகுதியில் வைத்து, கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, சந்தேகநபர் இன்றையதினம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, 15 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும்  ஐந்து வருட காலம் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆறாம் திகதி,  மயக்க மருந்து கொடுத்து பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்ததாக, பிரதிவாதி மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தொழில் பெற்றுத்தருவதாக மோசடி – நீதி அமைச்சர் விடுத்துள்ள அதிரடி பணிப்புரை..!

தொழில்வாய்ப்பினை பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்களை கைது செய்யுமாறு நீதி  அமைச்சர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். நீதி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம்...

புதிய தூதுவர்கள் ஜனாதிபதியினால் நியமனம்..!

நான்கு நாடுகளுக்கான புதிய தூதுவர்கள்  இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று முற்பகல் புதிய தூதுவர்கள் தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர். கொரியக்...

புதிய வரவுசெலவு திட்டம் – அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியானது..!

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட கப்ரால் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்வரும் நவம்பர்...

கல்விசார் சமூகத்திற்கு அங்கஜன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை..!

நாட்டில் எதிர்காலத்தில் கல்விசார் புதிய தலைமுறை ஒன்றை உருவாக்குவதற்கு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ்மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டார். கொழும்பு இந்து கல்லூரியில் இன்று...

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் அடையாளம்  காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராஜியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில்...

Developed by: SEOGlitz