மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் வீடமைப்பு திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி!

- Advertisement -

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்றையதினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவை குறித்த பகுதிக்கு சென்று, விடயங்களை ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

- Advertisement -

பொம்மைவெளி பகுதியில் வெள்ளப்பெருக்கு அபாயம் தொடர்ச்சியாக காணப்படுவதாகவும், தமக்கான வீடமைப்பு திட்டத்தை அமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரி அந்த பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவனொருவன் ‘மஹிந்த மாமா எங்களுக்கு வீடு கட்டி தரமாட்டிங்களா?”” என்ற பதாகையொன்றை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.

இந்த புகைப்படத்தை நேற்றயதினம் பார்வையிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, குறித்த பிரச்சினை தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டு, குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்தார்.

இராஜாங்க அமைச்சரின் குறித்த விஜயத்தின்போது நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதனும் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் வீடமைப்பு திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பூக்கள் உற்பத்தி அதிகரிப்பு குறித்து சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்ட தகவல்!

நாட்டில் பூக்கள் உற்பத்தியை அதிகரிக்க 23 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பூச் செடிகள் மற்றும் ஏனைய பொருட்களை பூக்களை உற்பத்தி செய்வோருக்கு இலவசமாகப் பெற்றுக் கொடுக்க இந்த தொகை பயன்படுத்தப்படும்...

நாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 360 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வருகை தந்த...

CSK அணி குறித்து வெளியான தகவல்!

சுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பமாட்டார் என, அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார. தற்போது நடைபெற்றுவரும் IPL தொடரில் பங்கேற்பதற்காக சுரேஷ் ரெய்னா ஐக்கிய...

20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையுமில்லை: ம.வி.மு கருத்து!

20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற சுனில் ஹந்துனெத்தி இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS ·...

தேசிய பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!

தேசிய பால் உற்பத்தியை 70 வீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த பால் தேவையில் 40 வீதம் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களின் மூலமும், மிகுதி 60 வீதம் இறக்குமதி செய்யப்படும்...

Developed by: SEOGlitz