மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீள்குடியேற்ற பிரச்சினைகள் தொடர்பாக இராஜாங்க அமைச்சருடன் அங்கஜன் விசேட சந்திப்பு!

- Advertisement -

யாழ் மக்களின் மீள்குடியேற்ற பிரச்சினைகள் தொடர்பாக கிராமிய வீடமைப்பு, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவுடன் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் விசேட சந்திப்பொன்றினை மேற்கொண்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினது விசேட அறிவுறுத்தலின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு இன்று கிராமிய வீடமைப்பு, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த விஜயம் செய்திருந்தார்.

- Advertisement -

இதன்படி இன்று காலை 10 மணியளவில் சுன்னாகம் சபாபதி நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களுடன் “சொந்த காணிகளில் மீள் குடியேற்றல்” தொடர்பான கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த மற்றும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் ஆகியோர்  ஈடுபட்டிருந்தனர்.

குறித்த சந்திப்பின் போது யாழ் மாவட்ட அரச அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) முரளிதரன், பிரதேச செயலகர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், குருநகர் ஐந்து மாடி குடியிருப்பு பகுதிக்கும் குறித்த குழுவினர் விசேட விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது குருநகர் ஐந்துமாடி குடியிருப்பு கழிவகற்றல் பிரச்சனை மற்றும் குடிநீர் பிரச்சனை தொடர்பில் விரைவில் தீர்வு எடுக்கப்படும் என கிராமிய வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்  இந்திக்க அநுருத்த தெரிவித்தார்.

குருநகர் ஐந்து மாடி குடியிருப்புக்கு பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் இராஜாங்க அமைச்சர்  இந்திக்க அநுருத்தவின் கவனத்திற்கு கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பரந்தன் – பூநகரி பிரதான வீதி பூட்டப்பட்டது!

கிளிநொச்சி, பரந்தன் - பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர்  சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார். இதன்படி பரந்தன் பூநகரி வீதியூடாக எதிர்வரும் மூன்றாம்...

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் ஒழுங்காகச் செயற்படவில்லை : அரவிந்தகுமார்!

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் முறையற்ற போக்கை கடைப்பிடித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார். பதுளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.   CAPITAL...

வீதியை புனரமைத்து தருமாறு கோரி மடுல்சீமை மக்கள் ஆர்ப்பாட்டம்!

மடுல்சீம - மாதோவ பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். மடுல்சீம - பசறை பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மருத்துவ தேவைகளுக்காக பயணிப்போர், பாடசாலை மாணவர்கள் என...

கொக்குப்படையான் கிராம மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளது எனவும், விரைந்து நடவடிக்கை...

கொரோன தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்!

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓமான் நாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

Developed by: SEOGlitz