மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்தினால் அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்ப்படுத்த முடியாது : அஷோக அபேசிங்க!

- Advertisement -

முன்மொழியப்பட்டுள்ள 20 ஆம் திருத்தத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி என்ற ரீதியில் எதிர்ப்பினை தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

- Advertisement -

“நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்காகவே 19 ஆம் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தற்போதயை அரசாங்கம் 20 ஆம் திருத்தத்தை முன்மொழிந்துள்ளது. 19 ஆவது திருத்தத்தில் காணப்படுகின்ற ஒரு சில  விடயங்களை தவிர்த்து ஏனைய அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆனால் தற்போதைய அரசாங்கத்தினால் 20 ஆம் திருத்தத்தை கொண்டுவர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி என்ற ரீதியில் நாம் 20 ஆம் திருத்தத்திற்கு முழுமையான எதிர்ப்பினை தெரிவிக்கின்றோம்.

19 ஆம் திருத்தத்தில் ஒரு சில குறைபாடுகள் மாத்திரமே காணப்பட்டன” என நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பாடும் நிலாவின் மறைவிற்காக கடற்கரையில் வடிவமைத்த ஓவியம்!

புகழ்பெற்ற பிண்ணனி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்தியாவின் ஓடிசா மாநிலத்தில் புரி கடற்கரையில் எஸ்.பி.பி யின் படத்தை வடிவமைத்துள்ளார். இச் சிற்பத்தை சர்வதேச மணற்சிலை வடிவமைப்பாளர் ஒருவர் வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Tribute to legendary...

எஸ்.பி.பி யின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்…..

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல்  அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டம்  தாமரைப்பாக்கத்தில் உள்ள  அவரது பண்ணை இல்லம் பகுதியில்   ராணுவ  மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெற்றதுடன்  72  குண்டுகள்...

எஸ்.பி.பி யின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்!

இளையத் தளபதி நடிகர் விஜய் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.  

கொழும்பு நகரில் போக்குவரத்து சட்டவிதிமுறைகளை மீறுவோருக்கு எச்சரிக்கை!

கொழும்பு நகரில் போக்குவரத்து சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட ஆயிரத்து 200 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சாரதிகள் பொலிஸ் தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பஸ் முன்னுரிமை...

எஸ்.பி.பி யின் இறுதிக்கிரியைகள் ஆரம்பம்!

மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இறுதிக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சமய விதிமுறைகளுக்கமைய இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுவருகின்றன. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் புதல்வர் எஸ்.பி.சரண் தனது தந்தையாருக்கு இறுதிக்கிரியைகள் சம்பிரதாயங்களை முன்னெடுத்துள்ளார்.

Developed by: SEOGlitz