மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றமே இறுதித்தீர்மானம் எடுக்கும் : அமைச்சர் கெஹலிய!

- Advertisement -

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் நாடாளுமன்றத்தினால் மாத்திரமே இறுதித்தீர்மானம் எட்டப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

- Advertisement -

“ஜனநாயக உரிமையூடாக அனைத்து விடயங்களுக்கும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் நாடாளுமன்றத்தினால் இறுதித் தீர்மானம் எட்டப்படுகின்றது.

பல்வேறு துறையில் அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகளுக்கமையவே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது. சட்டமா அதிபர் திணைக்களம் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது.

எனவே ஏற்றுக்கொள்ளக்கூடிய பல்வேறு விடயங்கள் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை நான் இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்” என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கட்சிக்குள் இருந்து தொடர்ந்தும் போராடுவேன் : சட்டத்தரணி மணிவண்ணன்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிடக் கூடாது என்பதற்காக தான் தொடர்ந்தும் கட்சிக்குள் இருந்து போராடுவேன் என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள...

நிரபராதி என்பதாலேயே சகோதரர் விடுவிக்கப்பட்டார் : ரிஷாட்!

நிரபராதியாக இருந்தமையினாலேயே சகோதரர் விடுவிக்கப்பட்டுள்ளார் என மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரவித்துள்ளார். வவுனியாவில் இன்று காலை ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக...

கிளிநொச்சிக்கு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க விஜயம்!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பனை, தென்னை ஆகியவற்றின் அபிவிருத்திகள் தொடர்பாக விசேடமாக ஆராயப்பட்டுள்ளது. இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ நேரடி விஜயம் மேற்கொண்டு இன்று முழுமையாக ஆராய்ந்தார். அத்துடன், கிளிநொச்சி இயக்கச்சி...

வவுனியா மாவட்ட செயலகத்தில் புதிய கேட்போர் கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது!

வவுனியா மாவட்ட செயலகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கேட்போர் கூடம் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 55 மில்லியன் ரூபா செலவில் குறித்த கேட்போர் கூடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இந்த நிகழ்வு வவுனியா மாவட்ட...

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏற்பாட்டில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று...

Developed by: SEOGlitz