மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜப்பானில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

- Advertisement -

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக, ஜப்பானில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 292 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஜப்பானின் நரீட்டா விமான நிலையத்தில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான, UL 455 எனும் இலக்க விசேட விமானத்தின் மூலம் இன்று அதிகாலை 3.40க்கு, இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

- Advertisement -

இந்த நிலையில், கட்டாரில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கை மற்றும் வெளிநாட்டு கப்பல் பணியார்கள் 64 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கட்டாரின் தோஹா விமான நிலையத்தில் இருந்து கட்டார் விமான சேவைக்கு சொந்தமான, QR 668 எனும் இலக்க விசேட விமானத்தின் மூலம் இன்று அதிகாலை 5.35க்கு, இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அத்துடன், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கை மற்றும் வெளிநாட்டு கப்பல் பணியார்கள் 26 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் விமான நிலையத்தில் இருந்து கட்டார் விமான சேவைக்கு சொந்தமான, EK 648 எனும் இலக்க விசேட விமானத்தின் மூலம் இன்று அதிகாலை 1.30க்கு, இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வருகை தந்த இவர்கள் அனைவருக்கும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சென்னை எதிர் ராஜஸ்தான்: சென்னைக்கு இமாலய இலக்கு!

13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 4 ஆவது போட்டி தற்போது இடம்பெற்றுவருகின்றது இதற்கமைய, இந்தப் போட்டியில் Rajasthan Royals மற்றும் Chennai Super Kings ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப்...

பாகிஸ்தானில் 262 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: இருவருக்கு மரண தண்டனை!

பாகிஸ்தானில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றுக்கு தீ வைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் சுமார் 260 பேர் உயிரிழந்தனர். ஆடைத்...

மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்

மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அம்பிட்டிய சுமன தேரர் தொடர்பில் இவ்வாறு...

ஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை!

உரிய தகைமைய பூர்த்தி செய்துகொண்டுள்ள ஆசிரியர் உதவியாளர்கள், ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஆசிரிய உதவியாளர் நியமனம்...

Developed by: SEOGlitz