மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதான வீதிகளில் கொண்டுவரப்படவுள்ள புதிய மாற்றம்!

- Advertisement -

நாட்டில் வீதிகளின் இரு புறத்திலும் ஒரு இலட்சம் மரங்களை நடும் செயற்றிடத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இதற்கான அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

- Advertisement -

அத்துடன், ஒவ்வொரு மாகாணங்களுக்கும் உரிய வீதிகளின் இரு புறத்திலும் நடுவதற்குப் பொருத்தமான மர வகைகளை தெரிவு செய்வதற்காக துறைசார் நிபுணர்களின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை, இந்த செயற்றிட்டத்தின் கீழ், சூழல் பாதுகாப்பை மேம்படுத்தக்கூடிய மர வகைகளை தெரிவு செய்வதில் முன்னுரிமை வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஆசிரியர்களின் பெயர் விபரங்கள் பொலிஸாரினால் சேகரிப்பு!

வடக்கு - கிழக்கின் சில பகுதிகளில் நேற்றையதினம் ஹர்த்தால் இடம்பெற்ற நிலையில் வவுனியாவில் பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களின் பெயர் விபரங்கள் பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளன. இதற்கமைய, பொலிசார் பாடசாலை அதிபர்களை தொடர்பு கொண்டு, பாடசாலைக்கு சமூகமளித்த...

ஆர்மீனியா – அசர்பைஜான் படைகளுக்கிடைல் மோதல் – 31 பேர் உயிரிழப்பு!

Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கிடையில் தொடர்ந்தும் கடுமையான மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இரண்டு  தரப்புகளில் இருந்தும் 31 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், பொது மக்கள் 26 பேர்...

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயரின் நியமனம்: பேராயர் ஜஸ்ட்டின்!

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயராக வணக்கத்திற்குரிய துஷந்த ரொட்ரிகோவை நியமிப்பதாக Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி தெரிவித்துள்ளார். Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மறைமாவட்ட சபையின் கோரிக்கைக்கமைய, யாப்பின்...

தேசிய கொடி – பௌத்த கொடிகள் இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!

அடுத்த வருடம் முதல் பாடசாலை சீருடை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பெருமளவான வீதத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இதற்கமைய, பெரிய மற்றும்...

Developed by: SEOGlitz