மெய்ப்பொருள் காண்பது அறிவு

வியத்மக அமைப்பிற்கு ஜனாதிபதி விடுத்த விசேட உத்தரவு!

- Advertisement -

புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குமாறு, வியத்மக அமைப்பின் நிபுணர்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் முதல்முறையாக வியத்மக அமைப்பின் நிபுணர்களை, நேற்று மாலை எதுல்கோட்டையில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் சந்தித்திருந்தார்.

இதன்போது, பல்துறைசார் நிபுணர்களின் பங்களிப்புடன், 2016ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட வியத்மக அமைப்பின் மூலம், மக்களின் ஆழமான சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அரசியல்வாதிகள் தலையிடவேண்டிய இடங்களை அடையாளம் கண்டு, அதனுடன் தொடர்புபடாத வகையில் நாட்டின் எதிர்கால பயணத்துக்காக கொள்கைகளை வகுக்க வேண்டிய பொறுப்பு வியத்மக அமைப்பின் முன்னால் காணப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அரசியலமைப்பு விவகாரம் : உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் மீதான பரிசீலணைகள் ஆரம்பம்!

20 ஆவது திருத்த சட்டமூலத்தை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் நடவடிக்கை சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜய சூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள்...

அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் கால எல்லை நிறைவு!

அரசியலமைப்பு திருத்த சட்டவரைபுக்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்கான கால எல்லை இன்றுடன் நிறைவடைகின்றது. அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டவரைபினை, நீதி அமைச்சர் அலி  சப்ரி கடந்த 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில்...

ஆசிரியர்களின் பெயர் விபரங்கள் பொலிஸாரினால் சேகரிப்பு!

வடக்கு - கிழக்கின் சில பகுதிகளில் நேற்றையதினம் ஹர்த்தால் இடம்பெற்ற நிலையில் வவுனியாவில் பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களின் பெயர் விபரங்கள் பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளன. இதற்கமைய, பொலிசார் பாடசாலை அதிபர்களை தொடர்பு கொண்டு, பாடசாலைக்கு சமூகமளித்த...

ஆர்மீனியா – அசர்பைஜான் படைகளுக்கிடைல் மோதல் – 31 பேர் உயிரிழப்பு!

Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கிடையில் தொடர்ந்தும் கடுமையான மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இரண்டு  தரப்புகளில் இருந்தும் 31 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், பொது மக்கள் 26 பேர்...

Developed by: SEOGlitz