மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியாவில் சற்றுமுன் பயங்கர விபத்து : மாணவன் உயிரிழப்பு!

- Advertisement -

வவுனியாவில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மாணவன் ஒருவன் உயிரிந்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த விபத்துச் சம்பவத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 15 வயதுடைய எழில்ராசா புவிதரன் என்ற புதுக்குளம் மகாவித்தியாலய மாணவனே உயிரிழந்துள்ளார்.

- Advertisement -

வவுனியா, ஈச்சங்குளம் பிரதான வீதியில் தனியார் கல்வி நிலையத்தில் இருந்து வீடு நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த மாணவனை அதே பாதையில் சென்ற மோட்டர் சைக்கிள் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வீதி ஒழுங்கைக் கடைப்பிடிக்காது மூன்று மோட்டர் சைக்கிள்கள் சமாந்தரமாக சென்றமையினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாக அப்பகுதியில் நின்றவர்கள் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விபத்துக்குள்ளான மோட்டர் சைக்கிள் தவிர ஏனை இரு மோட்டார் சைக்கிள்களும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

உடனடியாக போர்நிறுத்தம் செய்வதற்கு ரஷ்ய ஜனாதிபதி அழைப்பு!

ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கு இடையில் உடனடியாக போர்நிறுத்தம் செய்வதற்கு ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான்...

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் நாடு திரும்புவதற்கு விருப்பம்!

விஷம் கொடுக்கப்பட்டு ஜேர்மனியில் சிகிச்சை பெற்றுவரும் ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny மீண்டும் நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றில் இன்று இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் தனது அரசியல் நடவடிக்கைகளைத்...

கட்சிக்குள் இருந்து தொடர்ந்தும் போராடுவேன் : சட்டத்தரணி மணிவண்ணன்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிடக் கூடாது என்பதற்காக தான் தொடர்ந்தும் கட்சிக்குள் இருந்து போராடுவேன் என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள...

நிரபராதி என்பதாலேயே சகோதரர் விடுவிக்கப்பட்டார் : ரிஷாட்!

நிரபராதியாக இருந்தமையினாலேயே சகோதரர் விடுவிக்கப்பட்டுள்ளார் என மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரவித்துள்ளார். வவுனியாவில் இன்று காலை ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக...

கிளிநொச்சிக்கு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க விஜயம்!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பனை, தென்னை ஆகியவற்றின் அபிவிருத்திகள் தொடர்பாக விசேடமாக ஆராயப்பட்டுள்ளது. இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ நேரடி விஜயம் மேற்கொண்டு இன்று முழுமையாக ஆராய்ந்தார். அத்துடன், கிளிநொச்சி இயக்கச்சி...

Developed by: SEOGlitz