மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெருந்தோட்ட மக்களுக்கு தனி முகவரியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை : அரவிந்தகுமார்!

- Advertisement -

பெருந்தோட்ட மக்களுக்கு தனி முகவரியை பெற்றுக்கொடுக்க அதிக அக்கறையுடன் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்து அதன் அங்கீகாரத்தை பெற்று மலையக மக்களுக்கு உரிய உரிமையை பெற்றுக்கொடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

- Advertisement -

பதுளை, எலதலுவ தோட்ட மக்களுக்கு தனி இலக்கத்துடன் கூடிய நிரந்தர முகவரியை வழங்கும் நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அரவிந்த குமார் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தோட்டம் என்ற முகவரி இல்லாது போய் தனியான முகவரி கிடைக்க ஆவன செய்யவுள்ளதாக கூறினார்.

மேலும், பெருந்தோட்ட பகுதிகளில் உப தபாலகங்களை அமைத்து தனித் தனியாக கடிதங்களை பெற்றுக் கொள்வதற்கு வழிவகை செய்வதாகவும் அவர்  மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஊவா சக்தி நிறுவன உத்தியோகத்தர்கள் கிராம அலுவலகர் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு!

சில தரப்பினரின் தேவைகளுக்கு இணங்கவே ஸஹ்ரான் ஹாசிம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கின்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையானதன்...

சஜித்தின் இணைப்புச் செயலாளராக சமித் விஜேசுந்தர நியமனம்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இணைப்புச் செயலாளராகவும், சிறப்புப் பிரதிநிதியாகவும் சமித் விஜேசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அதற்கான நியமனக் கடிதம் சஜித் பிரேமதாசவினால் வழங்கிவைக்கப்பட்டது. கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்வைத்து இந்த நியமனம் வழங்கிவைக்கப்பட்டமை...

நாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம்!

நாட்டில் கொரோனா தொற்றுகுள்ளான மேலும் 10 பேர் அடையாளம்  காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமானிலிருந்து வருகைத்தந்த 7 பேருக்கும், கட்டார், ஐக்கிய அரபு...

20 ஆவது திருத்தம் குறித்து பிரதமர் வலியுறுத்தல்….

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக எந்தவித சிக்கலும் ஏற்படாது என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த 20 ஆவது...

பெருந்தோட்ட மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!

பெருந்தோட்ட மக்களின் பொருளாதார, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான எதிர்காலதிட்டங்கள் குறித்து...

Developed by: SEOGlitz