மெய்ப்பொருள் காண்பது அறிவு

நெல்லியடி பேருந்து நிலையத்தில் விசேட சுற்றிவளைப்பு : ஒருவர் கைது!

- Advertisement -

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவர் யாழ்ப்பாணம் நெல்லியடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடி பேருந்து நிலையத்தில் ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவரே விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

4 கிராம் 07 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கைவசம் வைத்திருந்த பருத்தித்துறை அல்வாய் வதிரியைச் சேர்ந்த ஒருவரே விசேட நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடி பேருந்து நிலையத்தில் போதைப்பொருள் வர்த்தகம் இடம்பெற்று வருவது குறித்து நெல்லியடி விசேட காரியாலயத்தின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடி பொலிஸ் அதிகாரி ஜெயதிலக தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் மூலம் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடம் இருந்து 4 கிராம் 07 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 34 ஆயிரத்து 500 ரூபா பணம், கைத் தொலைபேசி ஒன்று, மோட்டார் சைக்கிள் ஒன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

நெல்லியடி பேருந்து நிலையத்தில் விசேட சுற்றிவளைப்பு : ஒருவர் கைது! 1 நெல்லியடி பேருந்து நிலையத்தில் விசேட சுற்றிவளைப்பு : ஒருவர் கைது! 2

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கிராமப்புற மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவர்களின் கிராமங்களுக்கே நேரில் சென்று உடனடித் தீர்வைப் பெற்றுத்தரவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக...

நாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 313 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 14 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குவைத்திலிருந்து வருகைதந்த 7...

அரச கணக்குக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று!

COPA எனப்படும் அரச கணக்குக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. கோப் மற்றும் கோபா என அழைக்கப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான  நாடாளுமன்ற குழு மற்றும் அரச கணக்காய்வு குழுவின் உறுப்பினர்கள் கடந்த...

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, சப்ரகமுவ மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஊவா மாகாணத்தில் பிற்பகல்...

Developed by: SEOGlitz