மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 24 பேர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, ஐக்கிய அரபு இராஜியத்தில் இருந்து நாடு திரும்பிய 4 பேர் மற்றும் கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 16 பேர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பிய ஒருவர், மாலைதீவில் இருந்து நாடு திரும்பிய இருவர் மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 219 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், 211 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து மேலும் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 996 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 39 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, கந்தகாடு புனர்வாழ்வு  மத்திய நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 11 பேர் மாத்திரமே தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும்,  கந்தகாடு புனர்வாழ்வு  மத்திய நிலையத்தில்  இருந்த இதுவரை  638 பேர்  கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ள நிலையில் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்காக 2 இலட்சத்து 53 ஆயிரத்து 842 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பூக்கள் உற்பத்தி அதிகரிப்பு குறித்து சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்ட தகவல்!

நாட்டில் பூக்கள் உற்பத்தியை அதிகரிக்க 23 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பூச் செடிகள் மற்றும் ஏனைய பொருட்களை பூக்களை உற்பத்தி செய்வோருக்கு இலவசமாகப் பெற்றுக் கொடுக்க இந்த தொகை பயன்படுத்தப்படும்...

நாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 360 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வருகை தந்த...

CSK அணி குறித்து வெளியான தகவல்!

சுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பமாட்டார் என, அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார. தற்போது நடைபெற்றுவரும் IPL தொடரில் பங்கேற்பதற்காக சுரேஷ் ரெய்னா ஐக்கிய...

20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையுமில்லை: ம.வி.மு கருத்து!

20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற சுனில் ஹந்துனெத்தி இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS ·...

தேசிய பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!

தேசிய பால் உற்பத்தியை 70 வீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த பால் தேவையில் 40 வீதம் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களின் மூலமும், மிகுதி 60 வீதம் இறக்குமதி செய்யப்படும்...

Developed by: SEOGlitz