மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் மோட்டார் சைக்கிள்கள்  இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரை!

- Advertisement -

யாழ்ப்பாணம், சுண்டுக்குளி பகுதியில் வீட்டில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன.

சுண்டுக்குளி, குருசர் வீதியில், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இன்று அதிகாலை 1.40 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ன.

- Advertisement -

வீட்டின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டு வீட்டின் வாசல் கதவிலும் வாள்களால் வெட்டிச் சேதமாக்கப்பட்டுள்ளது.

இனந்தெரியாத குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதல் சம்பவத்தில்  வீடு முழுவதும் தீ பரவியதால் தளபாடங்களும் எரிந்து நாசமாகியுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் மோட்டார் சைக்கிள்கள்  இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரை! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சில அரச நிறுவனங்களுக்கு கோப் குழுவினால் அழைப்பு!

தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை, தென்னை பயிர்ச்செய்கை சபை மற்றும் இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டன. நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை Zoom...

பிரான்ஸில் மீண்டும் தேசிய முடக்க செயற்பாடுகளை அமுல்..!

கொரோனா வைரஸ் அச்சநிலைமை காரணமாக பிரான்ஸில் மீண்டும் தேசிய முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் மருத்துவ ஆலோசகர் குழுவினர்  இதனை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸில் கடந்தவாரம்...

குறைந்த ஓட்டங்களுக்கு விக்கெட்டுக்களை பறிக்கொடுத்தது இலங்கை..!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து...

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தில் பணிபுரிந்த அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தில் பணிபுரிந்த 13 அதிகாரிகளும் அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட...

லைபீரிய கப்பலினால் சுற்றாடலுக்கு பாதிப்பு? சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை எச்சரிக்கை!

திருகோணமலை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான லைபீரிய கப்பலினால்  சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குமாயின் குறித்த கப்பல் நிறுவனத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை  தெரிவித்துள்ளது. இதேவேளை திருகோணமலை நோக்கி பயணித்த...

Developed by: SEOGlitz