மெய்ப்பொருள் காண்பது அறிவு

பூஸ்ஸ  சிறைச்சாலையில் கைதிகள் இன்றும் முன்னெடுத்துள்ள நடவடிக்கை!

- Advertisement -

பூஸ்ஸ  சிறைச்சாலை கைதிகள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

இந்த நிலையில் குறித்த போராட்டத்தில் இருந்து எட்டு பேர் விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

- Advertisement -

இதேவேளை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் சிலர்  நேற்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடும் குற்றங்களின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள  40 கைதிகளுள் 32 கைதிகள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கஞ்சிபானை இம்ரான், பொடிலெசி, வெலே சுதா, உள்ளிட்ட கைதிகள்  போராட்டத்தில் இருந்து விலகி செயற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கைதிகளை பார்வையிடுவதற்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டமை, தொலைபேசி பாவனை நிறுத்தப்பட்டமை உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து கைதிகள்  உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக  தெரியவந்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஐக்கிய தேசியக்கட்சியின் புதிய நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி…!

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட பலர் இன்னும் 6 மாதங்களில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்வார்கள் என, ஐக்கிய தேசிய கட்சி பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கண்டியில்...

தொடரின் திருப்பு முனையாக அமையப்போகும் இன்றைய போட்டி…!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில்...

நாட்டில் கொரோனா உயிரிழப்புகள் மேலும் அதிகரிப்பு -விபரம் உள்ளே!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை சற்று முன்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 77 வயதான...

கொரோனா தொற்று மீண்டும் சடுதியாக அதிகரிப்பு -விபரம் இதோ!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 492 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி,...

இலங்கை எதிர் இங்கிலாந்து: மூன்றாம் நாள் ஆட்ட விவரம் இதோ!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய நாள் ஆட்ட நேர...

Developed by: SEOGlitz