மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியாவில் உறுதி மொழியை அடுத்து தொழிலாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

- Advertisement -

வவுனியா நகரசபை சபைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் உறுதி மொழியை அடுத்து சுகாதார தொழிலாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா நகரசபை சுகாதார தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் கடந்த திங்கட்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில், குறித்த போராட்டம் தொடர்பில் வவுனியா நகரசபையின் விசேட அமர்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.

இந்த அமர்வில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நகரசபைத் தலைவரினால் போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதார தொழிலாளர்களுக்கு உறுதிமொழி கடிதமொன்றும்  வழங்கப்பட்டது.

இதில், சபை உத்தியோகத்தர்கள் கொண்ட குழுவுடன் இணைந்து குறித்த விடயத்துடன் தொடர்புடைய ஒருவரை நியமித்து, நகரசபையின் அட்டவணைப்படுத்தப்படாத ஊழியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பான கோரிக்கையை மீள் பரிசீலனை செய்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், போராட்டத்தை இடைநிறுத்திவிட்டு உடன் கடமைக்கு திரும்புமாறும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சுகாதார தொழிலாளர்கள் குறித்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு கடமைக்கு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் 16 ஆம் திகதி ஜனாதிபதியை சந்திப்பதற்கும் சுகாதார தொழிலாளர்கள் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும்  தெரிவித்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மேல்மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் சாத்தியம்? : கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

மேல்  மாகாணத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்று மாணவர்களுக்காக 907 பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி குறித்த பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்ப்ட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த...

இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று!

இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. சர்வதேச உறவுகள் இராஜாங்க அமைச்சரான தாரக பாலசூரியவின் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் கொரோனா  தொற்றுக்குள்ளான நபர்...

ஸ்பெயினில் பாரிய வெடிப்புச் சம்பவம் : இருவர் உயிரிழப்பு!

ஸ்பெயினின் மாட்றிட் நகரில் ஏற்பட்ட பாரிய வெடிப்புச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். எரிவாயு கசிவால் ஏற்பட்ட குறித்த வெடிப்புச் சம்பவத்தால் பல கட்டடங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த வெடிப்புச் சம்பவத்தினையடுத்து...

நெடுந்தீவில் விபத்திற்குள்ளான இந்திய மீனவர்கள் சடலமாக மீட்பு!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவப் படகு நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்த மீனவர்கள் இருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளன. கடற்படையினரால் இன்று மாலை இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார்...

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு : ஒருவர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 389 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 55 ஆயிரத்து 187 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை 53 வயதான...

Developed by: SEOGlitz