மெய்ப்பொருள் காண்பது அறிவு

மருந்துகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானம்!

- Advertisement -

எதிர்வரும் மூன்று வருடங்களில் நாட்டின் மருந்து தேவையில் 50 வீதத்தினை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தை மற்றும் பொதுமக்களுக்கு தரமான மருந்துகளை குறைந்த விலையில் வழங்குவதே இதன் நோக்கமென குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன் அனைத்து தயாரிப்புகளும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரை மற்றும் தரத்திற்கமைய தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மருந்து உற்பத்தி மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் தற்போதைய மருந்து தேவையில் 85 வீதம்  இறக்குமதி செய்யப்படுவதாகவும் இதற்கென வருடத்திற்கு 130 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டின் மருந்து தேவையை பூர்த்தி செய்வதற்காக  உள்நாட்டில் மருந்து உற்பத்தியை மேற்கொள்வதன் மூலம் ஆண்டுக்கு 60 பில்லியன் ரூபா சேமிக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளை மையப்படுத்தி ஹம்பந்தோட்டை தொழிற்துறை பகுதியில் 400 ஏக்கர் பரப்பளவில் மருந்து உற்பத்தியை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மருந்து உற்பத்திகளை மேற்கொள்வதற்கு உலகின் முன்னணி மருந்து நிறுவனங்கள் இணைந்துகொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அனுராதபுரம் ஒயாமடுவ பகுதியில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளூர் முதலீட்டாளர்களுக்கான வர்த்தக வலையமொன்றும் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  பொது மக்களுக்கு குறைந்த விலையில்  மருந்தை வழங்குவதற்காக நாடுமுழுவதும் 100 மருந்தகங்கள் அமைப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், வீடுகளுக்கு மருந்துகளை வழங்கும் திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

லிங்குசாமியுடன் இணைந்து அசத்தப்போகும் தெலுங்கு நடிகை..!

தமிழ் சினிமாவில் சண்டக்கோழி, பையா படங்களை இயக்கிய லிங்குசாமி இயக்கும் அடுத்த படத்தில் இளம் நடிகை கதாநாயகியாக நடிக்கிறார். தெலுங்கு திரையுலகில் தொடர் வெற்றிகளால் அசத்தி வரும், துறுதுறுப்பான இளம் நடிகரான, ராம் பொதினேனி,...

இந்தியாவின் ஐம்மு காஷ்மீர் பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!

இந்தியாவின் ஐம்மு காஷ்மீர் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஐம்மு காஷ்மீர் லடாக் எல்லைப்பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட...

சோமாலியாவில் இடம்பெற்ற கார்குண்டு தாக்குதலில் 20 பேர் பலி..!

சோமாலியாவில் இடம்பெற்ற கார்குண்டு தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர் சோமாலிய தலைநகர் மொகாடிசு  நகரில் உள்ள உணவகம்  ஒன்றில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ள மேலும்...

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகள் மீறல் – 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை  3 ஆயிரத்து 307 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியினை கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளை மீறி செயற்பட்ட...

மணல் அகழ்வு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த விசேட திட்டம் முன்னெடுப்பு!

மணல் அகழ்வு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக கூட்டுறவு சங்கங்களை நிறுவுவதற்கு புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டுவரும் மணல் அகழ்வு நடவடிக்கைகள் காரணமாக சுற்றாடலுக்கு பாதிப்பு...

Developed by: SEOGlitz