மெய்ப்பொருள் காண்பது அறிவு

கரையோரப் பகுதிகளில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்!

- Advertisement -

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு  கிழக்கு மற்றும்  வட மேற்கு கடற்படையினரால் இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக  இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

- Advertisement -

முல்லைத்தீவு செம்மலை கரையோரப்பகுதி,  பூநகரி பள்ளிக்குடா, மட்டக்களப்பு , மன்னார்  அரிப்பு கரையோர பகுதியில் குறித்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதன்போது 7 மீன்படி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

19 முதல்  58 வயதுக்கு  இடைப்பட்டவர்கள் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக முல்லைத்தீவு மன்னார் மற்றும் பூநகரி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா…!

மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி, மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க...

கைவிடப்பட்ட நுவரெலிய போராட்டம்….!

நுவரெலியா - கந்தப்பளை - பார்க் தோட்டத்தில்,  நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. பார்க் தோட்ட முகாமையாளரை இடமாற்றம் செய்வதற்கு, குறித்த பெருந்தோட்ட கம்பனி இணக்கியதை அடுத்து, தாம்...

சொகுசு பேருந்து செயற்றிட்டம் வெற்றி : இலங்கை போக்குவரத்து சபை!

Park & Ride சொகுசு பேருந்து செயற்றிட்டம் பாரிய வெற்றியை பெற்றுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், Park & Ride சொகுசு பேருந்து செயற்றிட்டத்தின்...

நாடாளுமன்ற அமர்வுகளுக்கு கட்டுப்பாடு : கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

நாடாளுமன்ற அமர்வுகளை இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்துவதற்கு நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த...

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 20  மாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். நாட்டில் நேற்றைய நாளில் 763 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில்  கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளங்...

Developed by: SEOGlitz