இலங்கையில் ருபெல்லா மற்றும் தாயிலிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று பரவுவதை முற்றாக இல்லாதொழித்திருக்கும் செயற்பாட்டிற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் Tedros Adhanom வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் Tedros Adhanom தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூவ வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இலங்கைக்கு இவ்வாறு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வெற்றிகள் அறிவியல் மற்றும் ஒற்றுமையுடன் நோய்களைத் தடுக்கலாம் என்பதுடன் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதற்கு சான்றுகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மேலும் இரு நாடுகளுக்கும் தமது வாழ்த்துக்களை குறித்த டுவிட்டர் பதிவில் Tedros Adhanom தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் Tedros Adhanom வாழ்த்து செய்திக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்திலேயே இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார்.