மெய்ப்பொருள் காண்பது அறிவு

தீ விபத்து ஏற்பட்ட கப்பலின் கப்டன் தொடர்பாக வெளியான புதிய தகவல்!

- Advertisement -

தீ விபத்து ஏற்பட்ட MT NEW DIAMOND கப்பலின் பிரதான கப்டன் காலி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கடற்படையினரின் விசேட பாதுகாப்புடன் இன்று இரவு 7.30 மணியளவில் கல்முனை குருந்தையடி கடற்பிரதேசத்தில் இயந்திரப் படகு ஒன்றில் அழைத்து வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து காலி துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

- Advertisement -

பனாமா அரசுக்கு சொந்தமான MT NEW DIAMOND   என்ற கப்பல் கடந்த செப்டம்பர் 3 ஆம் திகதி   தீ விபத்துக்குள்ளாகியது.

இதன் போது தீப்பற்றிய  கப்பலில் இருந்து காயமடைந்த நிலையில் மாலுமி ஒருவர் உள்ளிட்ட  18 ஊழியர்களை இலங்கைக்   கடற்படை மீட்டிருந்தது.

அத்துடன் குறித்த கப்பலின் பிரதான கப்டன் மீட்கப்பட்டு வேறு கப்பல் ஒன்றில் தங்க வைக்கப்பட்ட நிலையில் 6 நாட்களின் பின்னர் அவர் இன்று கரைக்கு அழைத்து  வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

விடுதலைப்புலி உறுப்பினர்களின் வழக்குகளை விரைவாக நிறைவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை..!

உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புடைய, வழக்குகளை விரைவாக நிறைவு செய்வது தொடர்பில், சட்டமா அதிபர் ஆராய்ந்து வருவதாக, இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்...

இலங்கையில் தடுப்பூசி வழங்குவதில் உள்ள பின்னணி – இரண்டு வயது குழந்தைக்கும் தடுப்பூசி..!

நாட்டில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. BBC செய்தி சேவையினால் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரமுகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி...

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களினால் நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களினால் நான்காவது நாளாகவும், கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள...

பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 தொடர் அதிரடியாக ஒத்திவைப்பு!

பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 தொடர் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்றுள்ள 7 வீரர்களுக்கு...

இலங்கையில் மற்றுமொரு கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி!

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு, தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது. அவசர பாவனைக்காக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Developed by: SEOGlitz