சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மேல் மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சப்ரகமுவ மாகாணத்திலும், நுவரெலியா மாவட்டத்திலும் பல இடங்களில் 50 மில்லி மீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நாட்டை ஊடறுத்து, குறிப்பாக வடக்கு, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மற்றும் மத்திய மலை நாட்டின் மலைப்பாங்கான பிரதேசங்களிலும் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.