பெருந்தோட்டங்களில் உள்ள முதியவர்களுக்கு சமுர்த்தி மறுக்கப்படுவது நியாயமற்ற விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் கூறுகின்றார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை விரைவில் வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கிழக்கின் திருகோணமலையில் தொல்பொருள் செயலணியினால் மக்களின் வாழ்வாதாரக் காணிகளை அடையாளமிடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபிக் கோரிக்கை விடுத்தார்.