மெய்ப்பொருள் காண்பது அறிவு

கோப்பு வடிவில் திட்டங்களை வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை : இராஜாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை!

- Advertisement -

எதிர்கால திட்டங்களை வடிவமைத்து கோப்பு வடிவில் வைத்திருப்பதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வடிவமைக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனவும் அவற்றை செயற்படுத்துவதே இராஜாங்க அமைச்சர்களின் பொறுப்பு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

ஜனாதிபதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில்  இன்று  இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் ஐந்து வருட காலத்திற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இதற்கமைய, ஆண்டுதோறும் செலவிடப்படக்கூடிய தொகை மதிப்பிடப்பட வேண்டுமெனவும் ஜானாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமது  தேர்தல் வாக்குறுதிகளை கருத்தில் கொண்டு, தற்போதைய அரசியல் கலாசாரத்தை  மாற்றியமைக்க உள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.

மேலும், கல்வி, விவசாயம், தொழில்நுட்பம், வீடமைப்பு, நீர் வழங்கள், நகரப்புற மேம்பாடு மற்றும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த துறைகளில் எதிர்காலத்தில் எழும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக மாதம் ஒரு முறை இராஜாங்க அமைச்சர்களை சந்திப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

48 MP Quad AI கெமெரா, 5000mAh மின்கலம், 4GB RAM + 128GB ROM உடன் Huawei Y7a இலங்கையில்

உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான Huawei, அண்மையில் நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆன Y7a ஐ அறிமுகப்படுத்தியது. சந்தேகத்திற்கு இடமின்றி அது இலங்கையில் உச்ச அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் மொபைல் விளையாட்டாளர்களுக்கு...

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது…

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 485 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து  குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 447 ஆக...

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் பிரேதப் பெட்டிகளுக்கு பணம் செலுத்த வேண்டும் : அமைச்சர் பவித்ரா!

கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களுக்கான பிரேதப் பெட்டிகளுக்கு பணம் செலுத்தப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி குறிப்பிட்டுள்ளார். வரவு செலவு திட்டத்தின்  மூன்றாவது வாசிப்பு மீதான  மூன்றாம்  நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர்...

றிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற  உறுப்பினர்  ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரச நிதியினை முறைகேடாக பயன்படுத்திய...

ஒபாமாவின் மூன்றாவது ஆட்சிக்காலமாக புதிய ஆட்சி அமையாது : ஜோ பைடன் உறுதி!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மூன்றாவது ஆட்சிக்காலமாக புதிய ஆட்சி அமையாது என ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் இதனை...

Developed by: SEOGlitz