இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் தஞ்சா கோங்க்ரிஜ்ப் (Tanja Gonggrijp) உள்ளிட்ட குழுவினர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு இன்று காலை அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு நன்றி தெரிவித்த நெதர்லாந்து தூதுவர் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டமைக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
அத்துடன் நியு டயமன்ட் கப்பலின் தீயணைப்பு நடவடிக்கைகள் குறித்தும் அந்தக் கப்பலில் இருந்த நெதர்லாந்து நாட்டின் விசேட நிபுணர்கள் தொடர்பிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நெதர்லாந்து தூதுவர் கேட்டறிந்தார்.
அத்துடன், இலங்கையில் மருத்துவமனைகள் மற்றும் பாலங்களை அமைத்தல் மற்றும் தொழிற்பயிற்சிகளை முன்னெடுத்தல் போன்ற விடயங்களில் அவதானம் செலுத்தவுள்ளதாகவும் நெதர்லாந்து தூதுவர் இச்சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், யாழ்ப்பாணத்தில் நீர்ப்பாசனம், விவசாயம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட நீண்டகாலத் திட்டங்களை முன்னெடுக்க நெதர்லாந்து தயாராக இருப்பதாகவும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.