மெய்ப்பொருள் காண்பது அறிவு

புலம்பெயர்ந்தோர் எமது அரசாங்கம் குறித்து அச்சமடையத் தேவையில்லை : பிரதமர்!

- Advertisement -

புலம்பெயர்ந்த இலங்கையர்கள் மற்றும் மக்கள் அமைப்புக்கள் எமது அரசாங்கம் குறித்து அச்சமடையத் தேவையில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முதலீடுகளை ஊக்குவித்தல் தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

“கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கையில் பல முதலீடுகளை மேற் கொள்ள வருகை தந்த புலம் பெயர்ந்து  வாழும்  இலங்கையர்களாகிய நீங்கள் அனுபவித்த சிரமங்களை நாம் நன்கறிவோம்.

குறிப்பாக  இலங்கையில்  முதலீடுகளை செய்வதற்கு உள்ளுர் முகவர்கள் தரகுப் பணம் பெற முற்பட்டதால் நீங்கள் பலர் நாட்டில் முதலீடு செய்வதை தவிர்த்து வெளியேறியுள்ளது எமக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.

எமது அரசு உங்களிற்கான முழுமையான பாதுகாப்பை  உறுதிப்படுத்தும்.

அத்துடன் உங்களிடம் யாராவது தரகுப் பணம் அல்லது வேறு ஏதாவது தொல்லைகள் கொடுத்தால் நீங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு நேரடியாக தெரியப்படுத்தலாம்.

குளிர் – பனி என்று பாராமல் உங்களை வருத்தி நீங்கள் உழைக்கும் பணத்தை உங்கள் மண்ணில் நீங்கள் தைரியத்துடன் முதலீடு செய்வதற்கு எமது அரசு என்றும் உங்களிற்கு பக்க பலமாக செயற்படும்.

எம் அனைவரதும் அழகிய இலங்கைத் தீவை உங்கள் வரவால் வெகு விரைவில் இன்னும் பண்மடங்கு அழகிய மற்றும் வளம் கொழிக்கும் உலகம் திரும்பிப் பார்க்கும் நாடாக்குவதற்கு நாம் அனைவரும் கைகோர்த்து பயணிப்போம்” என பிரதமர் மகிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அஞ்சலி செலுத்துவதற்கு தயாரான அருட்தந்தை யாழில் கைது!

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக கூறப்பட்டு அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலையைச் சேர்ந்த அருட்தந்தை பாஸ்கரனே யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு முன்பாக வைத்து இன்று மாலை 5.50 மணியளவில் யாழ்ப்பாணம்...

மீனவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும் :

கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் உரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை முன்வைத்துள்ளார். வரவுசெலவு திட்டம் மீதான இன்றை குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே...

களுபோவில பிரதேசத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தெஹிவளை , களுபோவில பிரதேசத்தின் கெவும்வத்தை பகுதியில் 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். களுபோவில பிரத்திபிம்பாராம கெவும்வத்தை பகுதியிலேயே கொரோனா தொற்றாளர்கள் எண்மர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொகுவள பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்றையதினம் 30...

குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

முல்லைத்தீவில் அம்புலன்ஸ் வண்டி மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் 13 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு, ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு...

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமர் மகிந்தவுடன் விசேட சந்திப்பு!

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். பிரதமரின் விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்...

Developed by: SEOGlitz