அகில இலங்கை ஜம்மய்த்துல் உலமாவின் உதவிப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து மௌலவி எம்.எம்.எம்.முர்ஷித் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக எம்.எம்.எம். முர்ஷித் அகில இலங்கை ஜம்மய்த்துல் உலமா சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக அச்சபையின் உதவிப் பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம். தாஸிம் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியங்களை பெறும் நடவடிக்கைகள் நேற்று இடம்பெற்றன.
இதன்போது குறித்த நடவடிக்கைகளை இரகசியமான முறையில் கையடக்க தொலைபேசியில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் ஒருவர் பதிவு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் இவ்விடயம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
மேலும் குறித்த மௌலவிக்கு ஆதரவு வழங்கிய சட்டத்தரணிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காகச் சென்ற கலகொட அத்தே ஞானசார தேரரின் காணொளியை எடுத்ததற்காகவே அவர் மீது நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.