லெபனானின் தலைநகரான பெய்ரூட் துறைமுகத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெடிவிபத்திற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை என்பதுடன் தீயை அணைப்பதற்கு பாதுகாப்புப் படையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த மாதம் லெபனானில் இடம்பெற்ற வெடிப்பு துறைமுகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பேரழிவிற்கு உட்படுத்தியது.
ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக துறைமுகத்தினது சேமிப்புக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அளவிலான அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததில் சுமார் 191 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.