மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராணுவத்தால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இராணுவத் தளபதி எச்சரிக்கை!

- Advertisement -

போதைப்பொருள் கடத்தலில் இராணுவம் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையில் அமைந்துள்ள இராணுவத்தின் 22வது படைப்பிரிவின் தலமைக் காரியாலயத்திற்கு இராணுவத் தளபதி விஜயம் செய்தார். இதன்போது இராணுவ உயர் அதிகாரிகளைச் சந்தித்த இராணுவத் தளபதி அங்குள்ள உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

- Advertisement -

குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இராணுவத் தளபதி,

“கொவிட் 19 இன் தாக்கம் இலங்கையில் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியில் இலங்கை இராணுவமானது சிரமங்களை பாராது கடமைகளில் ஈடுபட்டிருந்தது. இதன் காரணமாக நாட்டில் குறித்த நோய்த்தொற்றானது சமூகப் பரவலடையாது பாதுகாக்க முடிந்தது.
அதற்காக நன்றி தெரிவிக்கவே ஜனாதிபதி மற்றும் பிரதமரது பணிப்புரைக்கு அமைவாக இவ்விஜயத்தை மேற்கொண்டேன்.
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் பல தனிமைப்படுத்தல் முகாம்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அவற்றில் வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு திரும்பிவந்த எம் நாட்டை சேர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை விடயங்களையும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.
அத்துடன், போதைப்பொருள் பாவனை மற்றும் அதனை சட்டவிரோதமான முறையில் கடத்தும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகின்றன.
அவ்வாறான குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் உடனடியாகவே கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவர்” என இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டார்.
இராணுவத்தால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இராணுவத் தளபதி எச்சரிக்கை! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

போதைப்பொருள் மோசடிக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது!

போதைப்பொருள் மோசடிக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் அநுராதபுரம்  பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவுடன் இணைக்கப்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் பொலிஸ் பரிசோதகரினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இன்று குறித்த  நபர் கைது...

பசறையில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

பசறை பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். ஹொப்டன் மற்றும் கமேவெல பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை...

மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா…!

மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி, மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க...

கைவிடப்பட்ட நுவரெலிய போராட்டம்….!

நுவரெலியா - கந்தப்பளை - பார்க் தோட்டத்தில்,  நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. பார்க் தோட்ட முகாமையாளரை இடமாற்றம் செய்வதற்கு, குறித்த பெருந்தோட்ட கம்பனி இணக்கியதை அடுத்து, தாம்...

சொகுசு பேருந்து செயற்றிட்டம் வெற்றி : இலங்கை போக்குவரத்து சபை!

Park & Ride சொகுசு பேருந்து செயற்றிட்டம் பாரிய வெற்றியை பெற்றுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், Park & Ride சொகுசு பேருந்து செயற்றிட்டத்தின்...

Developed by: SEOGlitz