மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடந்த அரசாங்கம் மக்களின் ஆணையை மீறியே செயற்பட்டது : அமைச்சர் மஹிந்தானந்த!

- Advertisement -

நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு  அழுத்தம் கொடுக்கப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

“கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் நீதிமன்றங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.  மக்கள் ஆணை மீறப்பட்டது.

மத்திய  வங்கியில்  மோசடி இடம்பெற்றது. ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் அவ்வாறு இல்லை. 2015 ஆம் ஆண்டில் ரணில் மற்றும் மைத்திரி ஆகியோர் ஒன்றிணைந்து   ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு  வெற்றிபெற்றனர்.

அதனையடுத்து 8 மாதங்களின் பின்னர்   2015 ஆம்  ஆண்டு ஓகஸ்ட் மாதம்  பொதுத் தேர்தல் நடாத்தப்பட்டது. 106  ஆசனங்களை மாத்திரமே  பெற்றிருந்தனர்.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ  2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

8 மாதங்களில் பொதுத்தேர்தல் நடாத்தப்பட்டது. அதனூடாக 150 ஆசனங்களை பெற்றுக்கொண்டார். இது இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக பதிவான விடயமாகும் என்பதை நான் இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்” என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறை மீறல் – 13 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறி  செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை  5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்திநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...

இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த மேலும் 269 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபி நகரில் இருந்து 101 பேரும்,...

அங்கஜனின் வேண்டுகோளுக்கமைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில்  இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் வேண்டுகோளுக்கு அமைய...

Jaffna Stallions அணிக்கு முதல் தோல்வி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டியில் Colombo Kings அணி 6 விளையாட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நேன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் colombo kings ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

Developed by: SEOGlitz