அமெரிக்காவுடனான எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டினை அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“முழு நாட்டையும் அச்சுறுத்தும் பிரச்சினை காணப்படுகின்றது. தற்போதைய ஆட்சியாளர்கள் எம்.சி.சி உடன்படிக்கையினை இரத்து செய்வதாக தேர்தலுக்கு முன்னர் கருத்துக்களை கூறிவந்தனர்.
ஆனால் தற்போது அதைப்பற்றி எதனையும் அவர்கள் கூறவில்லை அமெரிக்காவுடனான எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு என்னவென்று யாருக்கும் தெரியாது.
69 இலட்சம் மக்கள் பெற்றுக்கொடுத்த வெற்றியினூடாக தற்போதைய அரசாங்கத்தினர் அமெரிக்காவுடனான எம்.சி.சி உடன்படிக்கையினை இரத்து செய்வார்களா இல்லை என்ற கேள்வி எழுந்துள்ளது என்பதை நான் இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.