மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆனைவிழுந்தான் சரணாலய விவகாரம் : அமைச்சர் கெஹெலிய வெளியிட்ட புதிய தகவல்!

- Advertisement -

ஆனைவிழுந்தான் சரணாலய பகுதியில் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் தவறிழைத்த தரப்பினருக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டின் போது கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

- Advertisement -

“நான் ஒன்றை தெளிவாகக் கூற விரும்புகிறேன். இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் ஆராயப்பட்டு வருகிறது. இது ஒரு நிறுவனத்துக்கு சொந்தமான இடம். இந்த இடம் உப குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலே எமக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பான முழுமையான அறிக்கை எமக்குக் கிடைத்ததும் எந்தவொரு சந்தேகமும் இல்லாமல் உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்” என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நுரைச்சோலை – லக்விஜய மின்நிலையம் தொடர்பான விசேட தீர்மானம்!

நுரைச்சோலை - லக்விஜய மின்நிலையம் தொடர்பான சுற்றுச்சூழல் மதிப்பாய்வில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையையும் இணைத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. லக்விஜய மின்நிலையம் மற்றும் அது தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆராயும் நோக்கில் கோப் குழு நேற்று...

மைத்ரிபால விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் நிமித்தம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நேற்றையதினம் இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, ஆணைக்குழுவில்...

கண்டி நகர் பாடசாலைகள் தொடர்பிலான விசேட அறிவிப்பு

கண்டி நகரில் அமைந்துள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதிவரை குறித்த பாடசாலைகள் முடப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் கொரோனா வைரஸ்...

ரஷ்யாவின் கொரோனா தொற்று குறித்த முழு விபரம்!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதிதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதன்படி ரஷ்யாவில் இன்றைய நாளில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 23ஆயிரத்து 675 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். மேலும்  507 உயிரிழப்புக்கள்...

தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு வழங்கவுள்ள ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ரஷ்யாவுடனான தொடர்புகள் குறித்து அமெரிக்க புலனாய்வுப் பிரிவிடம் உண்மைக்கு புறம்பான  தகவல்களை வெளியிட்டமை தொடர்பாக...

Developed by: SEOGlitz