மெய்ப்பொருள் காண்பது அறிவு

தூதுவர்களை நியமிப்பது தொடர்பாக நாடாளுமன்றில் யோசனை முன்வைப்பு!

- Advertisement -

6 நாடுகளுக்கான தூதுவர்களை நியமிப்பது தொடர்பான யோசனை, நாடாளுமன்ற உயர்பதவிகளுக்கான குழுவின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள நபர்களின் தகுதிகள் குறித்து இந்த குழுவின் மூலம் ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி, ஆப்கானிஸ்தானுக்கான இலங்கைத் தூதுவராக ஓய்வுபெற்ற அட்மிரல் கே. கே. வீ. பி. ஹரிசந்திர, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவராக சஞ்சீவி குணசேகர மற்றும் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக ஆரியசிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்துடன், பிரான்ஸுக்கான பேராசிரியர் ஷனிகா ஹிரிபுரேம, சீனாவுக்கான இலங்கைத் தூதுவராக பேராசிரியர் பாலித கொஹொன மற்றும் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக மிலிந்த மொரகொட ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த நபர்கள் தொடர்பான ஆட்சேபனைகள் இருப்பின், அதனை எதிர்வரும் 23ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்ற உயர்பதவிகளுக்கான குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்றதும், குறித்த நபர்கள் தமது கடமைகளை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவில் நிலவும் கொரோனா தொற்றின் தற்போதைய நிலைமை!

ரஷ்யாவில் மேலும் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 37 இலட்சத்து 38 ஆயிரத்து 690 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதேவேளை, ரஷ்யாவில் கொரோனா தொற்றினால்...

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியானது

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில், எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள கிரிகெட் தொடரின் போட்டி அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இங்கிலாந்துக்கு கிரிகெட் சுற்றலா மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி, மூன்று இருபதுக்கு இருபது மற்றும்...

Pfizer கொரோனா தடுப்பூசிக்கு அனுமதியளித்த அவுஸ்திரேலியா!

அவுஸ்திரேலியாவில் Pfizer கொரோனா தடுப்பூசி அவசர பயன்பாட்டுக்கு அவுஸ்திரேலிய மருத்துவ சபை இன்று அனுமதியளித்துள்ளது. இதன்படி பெப்ரவரி மாதத்தின் இறுதிப்பகுதியில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrison...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: ஷானி அபேசேகரவிடம் வாக்குமூலம் பதிவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்பலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தடுத்துவைக்க்பட்டுள்ள  குற்றப்பலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் வீடியோ தொழிநுற்பம் ஊடாக வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. உயிர்த்த...

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் சிலர் நாடுதிரும்பினர்

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 195 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இன்று காலை 8.30 அளவில் நிறைவடைந்துள்ள 24 மணிநேரத்தில் குறித்த இலங்கையர்கள் நாடு  திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இதன்படி சிங்கப்பூரில் இருந்து...

Developed by: SEOGlitz