மெய்ப்பொருள் காண்பது அறிவு

குளங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை விரைவு படுத்த ஜனாதிபதி உத்தரவு!

- Advertisement -

நாட்டில் உள்ள 5 ஆயிரம் குளங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை விரைவு படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவுறுத்தியுள்ளார்.

நீர்தேக்கங்கள் மற்றும் நீர்பாசன அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குளங்கள் ஆழமாக தோண்டப்பட்டாலும் தண்ணீரை சேமித்துவைப்பதற்கு பண்டைய தொழில்நுட்ப முறைகளையும் விஞ்ஞான முறைகளையும் பயன்படுத்தாமயே காரணமென இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்தகைய, குறைபாடுகளை தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றவகையில் அளவுகோலுக்கமைய குளங்களில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விலங்குகளின் நலன் கருது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் 500 சிறிய குளங்களையும் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜானாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், நாடு முழுவதும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களில் தேசிய உணவு உற்பத்தி பங்களிப்புத் திட்டத்தை செயற்படுத்தப்படுவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியான தன்ஷிகாவின் வீடியோ..!

மகளிர் தினத்தை முன்னிட்டு சாய் தன்ஷிகா நடித்து வரும் யோகி டா படத்தின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை தன்ஷிகா தற்போது நடித்து வரும் படம் ‘யோகி டா’. இயக்குனர் கௌதம்...

யாழ் செம்மணி இந்து மயானத்தில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் சுமார் 5 கிலோ கிராம் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்தனர். இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு இன்று அதிகாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் செம்மணி இந்து மயானத்தில் பை...

ஐ.ம.ச வின் இளைஞர் அணிக்கான புதிய நியமனங்கள் இன்று வழங்கிவைப்பு..!

ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர்  அணிக்கான புதிய நியமணங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி இளைஞர்  அணியின் தேசிய அமைப்பாளராக சமித் விஜேசுந்தர தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன்,  ஐக்கிய மக்கள் சக்தி இளைஞர்...

மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு – 1வது நாடளாவிய முயற்சி!

Fems AYA: மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு - முதலாவது நாடளாவிய முயற்சி Hemas Consumer நிறுவனத்துக்குச் சொந்தமான பெண்களின் சுகாதார பராமரிப்பு தொடர்பான முன்னணி தயாரிப்பான Fems, மாதவிடாய் ஆரோக்கியம்...

வடக்கு, கிழக்கின் சில பகுதிகளுக்கு திடீர் மின்வெட்டு..!

நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் திடீர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அனுராதபுர புதிய மின் விநியோக கட்டமைப்பில் இன்று மாலை 7.00 மணியளவில்  ஏற்பட்ட தொழிநுட்ப கோளாரு காரணமாகவே...

Developed by: SEOGlitz