அமெரிக்கா தமது துருப்புகளில் மூன்றில் ஒரு பங்கினை ஈராக்கில் இருந்து மேலும் சில வாரங்களுக்குள் மீளப்பெறுவதற்கு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, அமெரிக்க இந்த மாதத்தின் இறுதிக்குள் தமது துருப்புகளை 5 ஆயிரத்து 200 இல் இருந்து 3 அயிரமாக குறைக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் எஞ்சியுள்ள துருப்புகள் தீவிரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு ஈராக் பாதுகாப்பு படையினருக்கு ஆலோசனை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமது அனைத்து துருப்புகளையும் ஈராக்கில் இருந்து வெளியேற்றத் திட்டமிட்டுள்ளதாக கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
இதற்கமைய, ஈராக்கில் இருந்து 2 ஆயிரத்து 200 துருப்புகளை அமெரிக்கா இந்த மாதம் மீளப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.