பல்வேறு தேவைகளுக்காக இலங்கைக்குள் பிரவேசிக்கும் அனைத்து தரப்புகளும் இரண்டு வார காலத்திற்கு கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய தொற்று நோய் தடுப்புப் பிரிவின் சிரேஸ்ட தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவ்வாறு நாட்டுக்கு வருகை தருபவர்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு முன்னரும் பிரவேசித்த பின்னரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம் எனவும் வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.