மெய்ப்பொருள் காண்பது அறிவு

வீதி விபத்துக்கள் தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு அவசியம் : அரசாங்க அதிபர்!

- Advertisement -
பாடசாலை மாணவர்களுக்கு வீதி விபத்துக்கள் தொடர்பில் விழிப்புணர்வு இருக்க வேண்டுமென கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று பாடசாலை மாணவர்களின் துவிச்சக்கரவண்டிகளுக்கு ஒளியைப் பிரதிபலிக்கக்கூடிய  ஸ்டிக்கர்களை ஒட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களினது துவிச்சக்கரவண்டிகளுக்கு இரவில் ஒளிரக்கூடிய வகையிலான ஸ்டிக்கர்களை ஒட்டும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவையாகும். மாணவர்களிடையே வீதி விபத்துக்கள் தொடர்பிலும் அதிக விழிப்புணர்வைத் தரக்கூடிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகுவது அறியக்கிடைத்துள்ளது. மாணவர்கள் இவ்விடயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பதால் மட்டுமே இந்த கொடிய ஆபத்திலிருந்து தப்பிக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த சந்திரசேகர் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 3 ஆண்டுக்குள் 650 விபத்துக்களில் சுமார் 137 பேர் பலியாகி உள்ளதாகத் தெரிவித்தார்.
அதிலும் இளைஞர்களே அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே வீதி விபத்துக்களை வீதிப் போக்குவரத்து பொலிஸாரால் மட்டும் தடுக்க முடியாது.  மாணவர்களிடையே ஏற்படும் விழிப்புணர்வுகள் விபத்துக்களை ஓரளவு கட்டுப்படுத்த உதவும் எனவும் கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளர் கமலராஜ், அறிவியல் நகர் ஆடைத் தொழிற்சாலையில் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
வீதி விபத்துக்கள் தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு அவசியம் : அரசாங்க அதிபர்! 1
வீதி விபத்துக்கள் தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு அவசியம் : அரசாங்க அதிபர்! 2 வீதி விபத்துக்கள் தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு அவசியம் : அரசாங்க அதிபர்! 3 வீதி விபத்துக்கள் தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு அவசியம் : அரசாங்க அதிபர்! 4
- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண் துஷ்பிரயோகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

Developed by: SEOGlitz