மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழர் தரப்பில் தீர்வுக்கான பொறிமுறை இன்றுவரை உருவாக்கப்பட இல்லை : சபா.குகதாஸ்!

- Advertisement -

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் கூட கட்டமைக்கப்பட்ட பொறிமுறை இராஐதந்திரம் தமிழர் தரப்பில் கட்டமைக்கப்படவில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா. குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

- Advertisement -

“முள்ளிவாய்க்கால் யுத்த முடிவிற்கு பின்னர், கட்டமைக்கப்பட்ட பொறிமுறை இராஐதந்திரம் முறையாக வகுக்கப்பட்டு கையாளப்படவில்லை இது தமிழர் தரப்பின் பலவீனமான பக்கமாகவே இன்று வரை தொடர்கிறது.

2009 முன்பு விடுதலைப் புலிகள் போராட்டம் மூலம் பொறிமுறை நகர்வுகளை மேற்கொண்டனர் ஆனால் இராஐதந்திர வியூகங்கள் அரசியல் ரீதியாக கையாளப்படாமையால் அதன் அறுவடையை பெற முடியாது மௌனிக்கப்பட்டது.

2009 பின் மீண்டும் மிதவாத தமிழ் தலைவர்களுடன் முன்னாள் ஆயுதப்போராட்ட தலைமைகளும் இணைந்து ஐனநாயக தேர்தல்களில் மக்கள் ஆணையைப் பெற்று ஐனநாயக ஆசனங்களை அலங்கரித்தனர்.

ஆனால் தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உரிய பொறிமுறைக் கட்டமைப்பை கையாள இன்று வரை தவறி விட்டனர்.

இந்த விடையத்தில் தமிழர் நலன் சார்ந்த தேசிய கட்சிகள், அமைப்புக்கள் இன்றுவரை ஒன்றிணைந்த ஓரணியில் நிற்க தவறியுள்ளனர்.

அத்துடன் சில அமைப்புக்கள் தீர்வுத் திட்டம் ஒன்றை வரைந்தனர் அதற்கான மக்கள் அபிப்பிராயத்தை பெற தவறியுள்ளனர். மற்றும் சில தமிழ் தேசிய கட்சிகள் மறுபட்ட தீர்வுக்கான வடிவங்களை கொண்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் தீர்வை வலியுறுத்துவதற்கான வியூகங்கள் சம நேரத்தில் கூட்டாக கையாளப்படவில்லை அதற்கான பொறிமுறை கூட்டாக உருவாக்கப்படாமை மிதவாத தலைவர்களின் சாணக்கிய தோல்வியாகும்.

எதிர்வரும் காலம் தமிழர் தரப்பு தேசிய சக்திகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் தீர்வுக்கான பொறிமுறைகளை தயாரித்து அதற்கான குழுக்கள் மூலம் உள்நாட்டு வெளிநாட்டு இராஐதந்திர வியூகங்களுக்கு ஏற்ப காய் நகர்த்த தவறினால் தமிழர்களின் தாயக இருப்புக்கள் சிங்கள மயப்படுத்தலுக்கு உட்படுவதை தடுக்க முடியாத நிலை உருவாகும்” என சபா. குகதாஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று ஆரம்பம்

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். அத்துடன், இன்றைய தினத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பஸ்சேவை முன்னெடுக்கப்படுமெனவும், நாளை முதல்...

ஜப்பானில் இருந்து 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது இதன்படி, 7 லட்சத்து 28 ஆயிரத்து 460 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள்...

வாகன விபத்தில் பிரபல நடிகை காலமானார்

லிந்துலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிரபல நடிகை காலமானார் சிரேஷ்ட நடிகை ஹயசிந்த் விஜேரட்ன தனது 75 ஆவது வயதில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த நடிகை பயணித்த கார் நுவரெலியா தலவாக்கலை...

Developed by: SEOGlitz