மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு!

- Advertisement -
யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 62 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 39 பேருக்கு தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையில் நேற்று குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற குறித்த சுற்றிவளைப்பு தேடுதலின் போது குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 9 பேரும் சந்தேகத்தின் அடிப்படையில் 13 பேரும் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 9 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், போதைப்பொருள் குற்றச்சாட்டில் இரண்டாயிரத்து நாற்பது மில்லி லீட்டர்
கசிப்பினை உடமையில் வைத்திருந்த குற்றத்தில் ஒருவரும், முன்னூறு மில்லிலீட்டர் தடைசெய்யப்பட்ட சாராயம் வைத்திருந்த குற்றத்தில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஆயிரத்து ஐந்நூற்றி எழுபத்தி ஒன்பது கிராம் கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றத்தில் பெண் ஒருவரும், மூவாயிரத்து முன்னூற்றி இருபது மில்லிகிராம் கெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றத்தில் ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த சுற்றிவளைப்பில் யாழ்ப்பாண பிராந்திய பகுதிகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 13 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் மதுபோதையில் வாகனத்தினைச் செலுத்திய 15 சாரதிகளும் கைது செய்யப்பட்டதுடன், போக்குவரத்து விதி முறைகளை மீறிய குற்றத்தில் 39 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டது.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 180 இற்கும் மேற்பட்ட பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...

மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

காணொளி காட்சி மூலம் அமைச்சரவை சந்திப்பு – வரலாற்று நிகழ்வு என ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக...

தம்புள்ளை அணியை திணரடித்த Jaffna Stallions – தொடர் வெற்றி!

முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது போட்டியில் Jaffna Stallions அணி 66 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில், Jaffna Stallions மற்றும் Dambulla Viiking ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியில்...

Tigray பிராந்தியத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ள இராணுவப் படையினரை மீளப்பெறுமாறு கோரிக்கை!

எத்தியோப்பியாவின் Tigray பிராந்தியத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ள இராணுவப் படையினரை மீளப்பெறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Tigray பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள TPLF கிளர்ச்சியாளர்களின் தலைவர் Debretsion Gebremichael இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அத்துடன், Tigray...

Developed by: SEOGlitz