மெய்ப்பொருள் காண்பது அறிவு

கட்சி வேறுபாடுகளின்றி அரசியலமைப்புத் திருத்தத்தினை எதிர்க்க வேண்டும் : சுரேஷ் பிரேமச்சந்திரன்!

- Advertisement -

இருபதாவது அரசியல் திருத்தச்சட்டத்தினை கட்சி, இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்று திரண்டு இதனை எதிர்க்க வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

“கொண்டுவரப்படவுள்ள 20 ஆவதுதிருத்தம் என்பது ஜனாதிபதிக்கு மீண்டும் அதிகாரங்களை வழங்கி பிரதமருடைய ஒப்புதல் இல்லாமலேயே அமைச்சர்களை நியமிக்கவும், மாற்றவுமான அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றது.

முக்கியமான ஆணைக்குழுக்கள், திணைக்களங்கள் மற்றும் உயர் பதவிகள் போன்றவற்றுக்கான நியமனங்களை ஜனாதிபதியே வழங்கக் கூடிய வகையில் இந்த 20ஆவது திருத்தம் வழிவகுப்பதானது ஊழல், மோசடி மற்றும் சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதற்கே துணைநிற்கும்.

19 ஆவது திருத்தம் இருந்தபொழுது திணைக்களங்கள், ஆணைக்குழுக்கள் மற்றும் உயர்பதவிகள் போன்றவற்றுக்கான நியமனங்களை செய்வதற்கு ஆளுங்கட்சி எதிர்க்கட்சி மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய அரசியல் சாசன சபை இருந்தது.

ஆனால் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக இவை அகற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அதிகாரங்களை வழங்குவது மாத்திரமல்லாமல் நாடாளுமன்றக் குழு ஒன்றினுடைய ஒப்புதல் பெற்றுக்கொண்டால் மட்டும் போதுமானது என்ற நிலையை தோற்றிவிப்பதன் மூலம் நாட்டின் ஜனநாயகமே கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றது.

தற்பொழுது இந்த அரசியல் யாப்புத் திருத்தத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் எதிர்காலத்தில் தமது தவறுகளுக்காக வருந்தவேண்டிய நிலை ஏற்படும்.

அனைவரும் கட்சி, இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்று திரண்டு இதனை எதிர்க்க வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் நாடு படுபாதாளத்திற்குத் தள்ளப்பட்டுவிடும்” என சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

எதிர்பாராத வெற்றியை தன்வசப்படுத்தியது Colombo Kings…!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4 ஆவது போட்டியில் Colombo Kings அணி 34 ஓட்டங்களினால் எதிர்பாராத வெற்றியை பதிவு செய்தது. ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி...

கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு பேர் உயிரிழப்பு – இன்றைய நிலவரம் முழுமையாக…

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு 2 பகுதியை சேர்ந்ந 76 வயதுடைய...

கொரோனா தொற்றினால் மேலும் 213 பேர் அடையாளம் – சுகாதார அமைச்சு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 213 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பேலியகொடை கொரோனா கொத்தணியில் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான...

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

Developed by: SEOGlitz