மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெருமளவு போதை வில்லைகளுடன் இருவர் கைது!

- Advertisement -

18 ஆயிரத்து தொள்ளாயிரம் போதை வில்லைகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, குறித்த சந்தேகநபர்கள் முகத்துவாரம் பகுதியில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இதன்போது கைப்பற்றப்பட்ட  போதை வில்லைகளின் மொத்த பெறுமதி, நான்கு மில்லியன் ரூபாவாகும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மேல் மாகாணத்தின் பொது இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, 54 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொது மலசல கூடங்களில் போதைப் பொருட்களை பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை, நேற்று மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஷாமல் செனரத் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு பரிந்துரை

ஐக்கிய தேசியக் கட்சியின்  பொதுச் செயலாளர் பதவிக்கு  வட  மேல் மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்  ஷாமல் செனரத்  பெயரிடப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதிவியில் இருந்து முன்ளாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறை மீறல் – 13 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறி  செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை  5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்திநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...

இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த மேலும் 269 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபி நகரில் இருந்து 101 பேரும்,...

அங்கஜனின் வேண்டுகோளுக்கமைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில்  இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் வேண்டுகோளுக்கு அமைய...

Developed by: SEOGlitz