மெய்ப்பொருள் காண்பது அறிவு

மரணதண்டனை குற்றவாளியான பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்றம் அழைத்து வரப்பட்டார்!

- Advertisement -

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது,  சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

இதற்காக பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

- Advertisement -

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள  பிரேமலால் ஜயசேகரவுக்கு, நாடாளுமன்ற  அமர்வுகளில் பங்கேற்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

பிரேமலால் ஜயசேகரவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த  ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்,  நேற்றைய தினம் இந்த அனுமதி வழங்கப்பட்டது.

இதன்படி, இன்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 6.30 வரை நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது

இதற்கமைய, அவர் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய அமர்வில் கலந்து கொள்வதற்காக பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற வளாகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, இன்றைய அமர்வின் போது, 28 அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன.

மேலும், நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில்,  நாளைய தினம் உற்பத்தி வரி சட்டத்தின் கீழான 9 ஒழுங்குவிதிகள் மற்றும் மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் 10 கட்டளைகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், நாளை மறுதினம் துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான 6 கட்டளைகள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 3 ஒழுங்குவிதிகள் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 6 தீர்மானங்கள் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

மேலும், எதிர்வரும்  11 ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை விவாதம் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பொது மக்கள் பாதுகாப்பிற்கு முப்படையினர் கடமையில்…!

பொது மக்கள் பாதுகாப்பிற்கு முப்படையினரை கடமையில் ஈடுபடுத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார், இதற்கான அதி விசேட வர்த்தமானி ஜனாதிபதியினால் வௌியிடப்பட்டுள்ளது, இதற்கமைய இன்று முதல் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவுள்ளதாக...

நாடளாவிய ரீதியில் மக்கள் அஞ்சலி – சர்வமத வழிபாடுகள் முன்னெடுப்பு..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள...

உயிர்த்த ஞாயிறு குற்றவாளிகளுக்கு தராதரமின்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் – நாமல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தராதரம் பாராது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நாமல் ராஜபக்ஸ உறுதி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் தற்போது உள்ள சட்டங்களுக்கு அமைவாக...

ஆண்டுகள் இரண்டு கடந்தும் நீதிக்காய் இரந்து நிற்கும் மக்கள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள...

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

Developed by: SEOGlitz