மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீரற்ற வானிலை : நாடு முழுவதிலும் ஏற்பட்ட பாதிப்புக்கள் விபரம்!

- Advertisement -

கடந்த சில நாட்களாக  நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக கம்பஹா மாவட்டத்திலேயே, அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கடந்த இரண்டு நாட்களில், கம்பஹா மாவட்டத்தில் கடும் மழை, வெள்ளம் மற்றும் மின்னல் தாக்கம் உள்ளிட்ட அனர்த்தங்களினால் இரண்டாயிரத்து 461 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இடர் முகாமைத்துவ நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தின் களனிய, அத்தனகல்லை, மஹர, மினுவாங்கொடை, தொம்பே, ஜா எல, பியகம, நீர்கொழும்பு, மீரிகம, திவுலப்பிட்டிய, வத்தளை, கட்டானை மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் இவ்வாறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இதேவளை,  சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு மாவட்டத்தில் 139 குடும்பங்களைச் சேர்ந்த 518 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் மூன்று வீடுகள் முழுமையாகவும், 136 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

கொழும்பு மாவட்டத்தின், மொரட்டுவை, சீத்தாவக்கை மற்றும் ரத்மலானை ஆகிய பகுதிகளிலேயே, அதிகமான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

மேலும், களுத்தறை மாவட்டத்தில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 49 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய,  கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்தறை ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கும் மேல் மாகாணத்திலேயே அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, மேல் மாகாணத்தில் மூவாயிரத்து 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, அதிகம் பாதிக்கப்பட்ட இரண்டாவது மாகாணமாக வட மேல் மாகாணம் பதிவாகியுள்ளது.

இதற்கமைய, வட மேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் 159 குடும்பங்களைச் சேர்ந்த 680 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இதன்படி, புத்தளம் மாவட்டத்தின் வென்னப்புவ பகுதியிலேயே அதிகளவான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இதற்கமைய, வென்னப்புவ பகுதியில் 99 குடும்பங்களைச் சேர்ந்த 454 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, கண்டி மாவட்டத்தில் கடும் மழை மற்றும் காற்று காரணமாக 118 குடும்பங்களைச் சேர்ந்த 441 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, கண்டி மாவட்டத்தின் மினிப்பே, பாதஹேவாஹெட்ட உள்ளிட்ட பகுதிகளிலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, நாட்டில் தொடர்ந்தும் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது

இதன்படி, கொழும்பு, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்கை பிரதேச செயலகப் பிரிவிற்கும், காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலகப் பிரிவுக்கும் முதலாம் கட்ட மஞ்சள்நிற மண்சரிவு அபாய  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலக பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல, புளத்கொஹுப்பிட்டிய தெஹியோவிட்ட, கேகாலை மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மஞ்சள் நிறஅபாய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பிரதேச செயலகப் பிரிவிற்கும் மஞ்சள்நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடன் கூடிய வானிலை நிலவக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த பகுதிகளின் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது

வளிண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஊவா மாகாணத்திலும். அம்பாறை மற்றம் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளிலும், பிற்பகல் 2.00 மணிக்கப் பின்னர், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் வட மேல் மாகாகணங்களிலும், திருகோணமலை. ஹம்பாந்தோட்டை, கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களிலும், மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்றுவீசக் கூடும் என வளிண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று ஆரம்பம்

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். அத்துடன், இன்றைய தினத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பஸ்சேவை முன்னெடுக்கப்படுமெனவும், நாளை முதல்...

ஜப்பானில் இருந்து 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது இதன்படி, 7 லட்சத்து 28 ஆயிரத்து 460 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள்...

வாகன விபத்தில் பிரபல நடிகை காலமானார்

லிந்துலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிரபல நடிகை காலமானார் சிரேஷ்ட நடிகை ஹயசிந்த் விஜேரட்ன தனது 75 ஆவது வயதில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த நடிகை பயணித்த கார் நுவரெலியா தலவாக்கலை...

Developed by: SEOGlitz