மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாட்டுக்கு கடத்தப்படவிருந்த பெருமளவு தங்கம் பறிமுதல்!

- Advertisement -

வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வதற்காக கொண்டு செல்லப்பட்ட சுமார் 10 கிலோகிராம் தங்கம், சிலாபம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புத்தளம் – சிலாபம் பகுதியில், விசேட அதிரடிப்படையினரால் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே, குறித்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், இதன்போது சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

34 வயதையுடைய, புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, புத்தளம் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கைவிடப்பட்ட நுவரெலிய போராட்டம்….!

நுவரெலியா - கந்தப்பளை - பார்க் தோட்டத்தில்,  நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. பார்க் தோட்ட முகாமையாளரை இடமாற்றம் செய்வதற்கு, குறித்த பெருந்தோட்ட கம்பனி இணக்கியதை அடுத்து, தாம்...

சொகுசு பேருந்து செயற்றிட்டம் வெற்றி : இலங்கை போக்குவரத்து சபை!

Park & Ride சொகுசு பேருந்து செயற்றிட்டம் பாரிய வெற்றியை பெற்றுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், Park & Ride சொகுசு பேருந்து செயற்றிட்டத்தின்...

நாடாளுமன்ற அமர்வுகளுக்கு கட்டுப்பாடு : கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

நாடாளுமன்ற அமர்வுகளை இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்துவதற்கு நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த...

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 20  மாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். நாட்டில் நேற்றைய நாளில் 763 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில்  கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளங்...

முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஏனைய இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முகத்துவாரம் மீன்பிடி துறைமுகம் தொடர்பில் 2014 ஆம் ஆண்டு விலை மனு...

Developed by: SEOGlitz